ஈரோடு: விஜய்யை முன்வரிசையில் நின்று காண முண்டியடித்து ஓடிய தொண்டர்கள்.. விரட்டிவிட்ட போலீசார்
ஈரோடு: ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்யும் பொதுக்கூட்ட பகுதியில் அதிகாலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதால், போலீசார் முன்கூட்டியே பொதுக்கூட்ட திடலுக்கு தவெகவினரை அனுமதிக்கத் தொடங்கினர். இதனால் முன்வரிசையில் இடம் பிடிக்க முண்டியடித்துக்கொண்டு தவெகவினர் ஓடினர். அவர்களிடம் "மெதுவா போங்க.. உள்ள போய் நிக்க தான் போறீங்க!" என்று போலீசார் அறிவுறுத்தினர்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். இந்த கூட்ட நெரிசல் நாட்டையே உலுக்கியது.

ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கூட்ட நெரிசலையடுத்து தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் ஒத்திவைத்தார். கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறினார். அதன்பிறகு, கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு கூட்டத்தில் மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார்.
கடந்த வாரம் புதுவையில் விஜய் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில்தான் கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் விஜய்யின் பொதுக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெறுகிறது. இதனால், ஈரோடு பொதுக்கூட்டத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தவெகவினர் மேற்கொண்டுள்ளனர்.

காலையிலேயே குவிந்த தொண்டர்கள்
போலீசாரும் கடும் நிபந்தனைகளை விதித்து தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நடைபெறும் கூட்டத்தில் காலை 11 மணி முதல் 1 மணிக்குள் விஜய் பேசுகிறார். விஜய்யை பார்ப்பதற்காக நேற்று இரவில் இருந்தே தவெகவினர் குவியத் தொடங்கினர்.
காலை 8 மணிக்குப் பிறகு தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் கூட்டம் அதிகமாக இருப்பதாலும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்பதாலும் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டனர். விஜய் பிரசாரம் செய்வதை பார்க்க பாக்ஸ் பாக்ஸ்களாக பிரித்து தொண்டர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

விரட்டி விட்ட போலீசார்
இதனால், முன்வரிசையில் இடம் பிடிப்பதற்காக தவெகவினர் முண்டியடித்து சென்றனர். அதேபோல், போலீசாரின் அறிவுறுத்தலை மீறி விஐபிகளுக்காக வைக்கப்பட்ட பாக்ஸ் பகுதிகளுக்குள் செல்ல முயன்ற தவெக தொண்டர்களை போலீசார் விரட்டியடித்தனர். போலீசார் அறிவுறுத்தியும் கேட்காத தொண்டர்களை லத்தியை காட்டி விரட்டிவிட்டனர்.
இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காலையிலே வந்த செங்கோட்டையன் இறுதி கட்ட முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தினர்.

35 ஆயிரம் பேர் பங்கேற்பு?
அதிகாலையில் இருந்தே பல்வேறு இடங்களில் இருந்தும் தவெக தொண்டர்கள் குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது. தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் தவெக தொண்டர்கள் 10 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 25 ஆயிரம் பேரும் கலந்து கொள்வார்கள் என தவெகவினர் கூறினர்.
-
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன? -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!












Click it and Unblock the Notifications