எங்க.. என்னை கடந்து போங்க...தாளவாடி மலையில் தனிஒருவனாய் வாகன ஓட்டிகளை தெறிக்கவிட்ட யானை-வைரல் வீடியோ
சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் வாகன ஓட்டிகளை காட்டு யானை அலறவிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இதில் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் அவ்வப்போது பகல் நேரங்களில் வனச்சாலையில் சுற்றி திரிகின்றன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் தமிழக-கர்நாடக எல்லையில் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவரை சாலையோரம் நின்றிருந்த ஒற்றையானை ஆவேசத்துடன் துரத்தியது. ஒற்றை யானை துரத்தியதை கண்ட இளைஞர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடினர்.
இந்த காட்சியை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications