"நீங்கள் கேட்குறதுக்காகலாம் நான் பேச முடியாது!" அவங்க பெயரையே சொல்லாமல் விஜய் பதிலடி
ஈரோடு: நீங்கள் கேட்கறதுக்காகலாம் நான் எல்லாரையும் எதிர்த்துகிட்டு இருக்க முடியாது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யார் களத்தில் இருக்கிறார்களோ அவர்களைத்தான் எதிர்ப்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே சரளையில் தவெக பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், விஜய் அரசியலே பேச மாட்டேங்கிறார்.. விஜய் கொஞ்ச நேரம் தான் பேசுகிறார். வெறும் 8 நிமிஷம் தான் பேசுறார். நான் ஏன் சார் பேச வேண்டும். தனிப்பட்ட முறையில் பேசுவது தான் அரசியல் என்றால் பேச தெரியாது. தெரியும், உங்களை விட எனக்கு அதிகமாகவே பேச தெரியும். ஆனால் அந்த அரசியல் பேச வரவில்லை.

காஞ்சிபுரத்தில் பேசியதை தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள். மக்களுக்கு இலவசமாக கொடுப்பதை ஏன் விமர்சிக்கிறீங்க.. ஓசி ஓசி என ஏன் சொல்கிறீர்கள்.
என்ன கேட்பதற்கு யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா.. மக்களுக்கு ஒன்னு என்றால் விஜய் வந்து நிற்பான். மக்களும் இப்படித்தான்..
அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை
பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்லக்கூடாது. நாங்கள் ஒருவழியில் அரசியல் செய்துகிட்டு போகிறோம். நீங்கள் புலம்பி தள்ளுறீங்க.. இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்லை..என கத்திகிட்டே பயந்து போகும் சிறுவன் மாதிரி இருக்கு.. முதலில் மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்க சார்.. தயவு செய்து பெரியார் பெயரை மட்டும் சொல்லி கொள்ளையடிக்காதீங்க.
களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவுங்களுக்கும் சம்மந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்க போவது இல்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக நான் எதிர்க்க முடியாது.. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால்.. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதாக சொல்கிறார்கள். உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா.. (தொண்டர்கள் இல்லை.. இல்லை..) என்ன சொல்வது கேட்கிறதா?
100 ஆண்டுகளுக்கு முன்னாடி வகுப்புவாத பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார். எங்கள் கொள்கை தலைவர் அவர். அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழகத்தின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதில் கேள்வி கேட்க முடியாது. நாங்கள் ஒரு வழியில் அரசியல் செய்து போய்க் கொண்டிருக்கிறோம். உங்களுக்குதான் தவெக ஒரு பொருட்டே இல்லையே, அப்புறம் ஏன் கதறுகிறீர்கள், ஏன் புலம்புகிறீர்கள்?
உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்துள்ள காசுதான் துணை. எனக்கு என் மீது எல்லையில்லா பாசம் வைத்துள்ள மாஸ்தான் துணை. பெரியார் பெயரை சொல்லிக் கொண்டு தயவு செய்து கொள்ளையடிக்காதீர்கள். அப்படி செய்பவர்கள் எங்கள் அரசியல் எதிரி. அதனால்தான் எதிரி யார் என சொல்லி களத்திற்கு வந்துள்ளோம்.
களத்தில் இல்லாதவர்களையும் களத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்கிற ஐடியா இல்லை. திமுக ஆட்சியில் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என கேட்டோம், அனைவருக்கும் கொடுத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அனைவரும் சொந்த வீட்டிலேயேவா இருக்கீங்க, வாடகை வீட்டில் இல்லையா என மக்களிடம் கேட்டார். அப்போது எல்லாரும் ஆம் என்று பதில் அளித்தனர். அது போல் தமிழகத்தில் பல மாணவர்கள் பள்ளியில் இடைநிற்றல் குறித்தும் அது திமுக ஆட்சியில் நடந்தது என்பது குறித்தும் அவர் பேசியிருந்தார்.
விஜய் கட்சி ஆரம்பித்து விக்கிரவாண்டி மாநாடு முதல் புதுவை பொதுக் கூட்டம் வரை அதிமுக குறித்து விமர்சிப்பதே இல்லை என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். அது போல் திமுகவின் ஊழலை பற்றி பேசும் போது விஜய் எப்படி அதிமுகவை புறம் தள்ளுகிறார் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கெல்லாம் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவின் பெயரை கூட விஜய் குறிப்பிடுவதில்லை என்ற விமர்சனமும் உள்ளது. அந்த வகையில் அவர் பாஜகவின் பெயரை இந்த முறை கூட சொல்லவில்லை.












Click it and Unblock the Notifications