'நாக்கு வியாபாரி' சீமான் இப்போது பேசுவது சாதிவெறி! நேசித்த குரல் இதுவல்ல.. ராஜீவ் காந்தி ஆவேசம்
நான் ஒருகாலத்தில் நேசித்த சீமான் குரல் இதுவல்ல! சீமான் இப்போது பேசுவது சாதிவெறி! என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.
ஈரோடு: நான் ஒருகாலத்தில் நேசித்த சீமான் குரல் இதுவல்ல! சீமான் இப்போது பேசுவது சாதிவெறி! என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் அக்கட்சியின் ஊடக பிரநிதிநிதியாகவும் செயல்பட்டவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி. கட்சியில் ஏற்பட்ட சலசலப்பால் கடந்த 2020ம் ஆணடு செப்டம்பர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
அப்போது அவர் திமுகவில் இணைந்தது குறித்து பேசும் போது, தமிழ் தேசிய கொள்கை என்பது தராவிட இயக்கத்தின் விதையாக பார்க்கிறேன். இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழ் திசய கொள்கை தழைத்தோங்க அடிப்படை காரணமாக இருந்தது பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காரணம் என கருதுகிறேன். திராவிடம் சார்ந்த கொள்கையில் இணைந்து பயணிப்பது தான் எனது திட்டம் என்றும் அப்போது கூறினார்.

போராட்டம்
ஒரு காலத்தில் சீமானை ஆதரித்து பலமுறை வீடியோ வெளியிட்டிருந்த ராஜீவ் காந்தி இப்போது கடுமையாக எதிர்ப்பு தெரித்துள்ளார். ஈரோட்டில் அருந்தியர்கள் குறித்து பேசியதை சீமான் பேசிய வீடியோ வைரலாகி பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. சீமானின் பேச்சுக்கு தலித் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீமானை கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டங்கள், உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்கள் நடந்தன.

விஜயநகர மன்னர்கள்
சீமான் அப்படி என்ன பேசினார்... ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு வாக்கு சேகரிக்க நாம் தமிழர் கட்சியினர் ஈரோட்டில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். வியாழக்கிழமை சீமான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "விஜயநகர பேரரசு நிறுவிய பிறகு உங்கள் மன்னர்களுக்கு செய்ததை போல் எங்களுக்கு பட்டாடை செய்து கொடுங்கள் என்று கேட்டார்கள். வேறு ஆளை பாருங்கள் என்று அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் குஜராத்தில் இருந்து சவுராஷ்டிராக்களை இந்த விஜயநகர மன்னர்கள் இறக்கினார்கள்.

ஆந்திரா மக்கள்
கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அதைப்போல எங்கள் ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போட வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாம ஆந்திராவில் இருந்து ஆதிக்குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள். தன் மானம் மிக்கவர்கள் தமிழர்கள். ஜாதியை சொல்லி வாக்கை குறைத்துவிட முடியாது. இந்த தமிழ்நாடு நூலிழையில் தவறு பண்ணிருச்சு. அண்ணாவிற்கு பிறகு நெடுஞ்செழியனிடம் போயிருந்தால் தமிழ்நாடு உருப்பட்டிருக்கும். நாமும் உருப்பட்டிருப்போம். நாங்கெல்லாம் கட்சி ஆரம்பிச்சிருக்க மாட்டோம். கடைசி வரை ஒரே மனைவியுடன் வாழ்ந்த தலைவன் நெடுஞ்செழியன் தான்" இவ்வாறு சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

சாதிவெறி
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், "மனித மலத்தை மனிதன் அள்ளுவது சமூக குற்றம் என நாகரீக சமூகம் பேச தொடங்குகிற இக்காலத்தில், சுயசாதி பெருமைகள் பேசி அருந்ததிய மக்களை கொச்சை படுத்தும் சில நாக்கு வியாபாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்! நான் ஒருகாலத்தில் நேசித்த சீமான் குரல் இதுவல்ல! சீமான் இப்போது பேசுவது சாதிவெறி!" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
-
ஓரே வருஷத்தில் மதுக்கடைகள் மூடப்படும்.. கல்விக்கடன் தள்ளுபடி.. சீமான் தேர்தல் வாக்குறுதி -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications