ஈரோடு இளம்பெண் மணிமேகலா.. வேலை பார்த்த கம்பெனியில் கணவன்.. கனவில் கூட நினைக்காத சம்பவம்
ஈரோடு: ஈரோடு அருகே உள்ள சித்தோடு வாய்க்கால் மேடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த கோபால், வெல்டிங் பட்டறை தொழிலாளி ஆவார்.இவரது மனைவி மணிமேகலா.. மணிமேகலா ஈரோட்டின் புறநகர் பகுதியான சித்தோடு அருகே தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கணவனை பிரிந்து வாழ்ந்துவந்த மணிமேகலாவை, கணவர் கோபால் கம்பெனிக்கே போய் சந்தித்தார். அப்போது வேலை செய்தவர்கள் கனவில் கூட நினைக்காத சம்பவம் நடந்தது.
கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு பேசித்தீர்த்தால் பிரச்சனைகள் வராது.மாறாக நீ என்ன சொல்வது, நான் ஏன் கேட்கவேண்டும்.. நீ எப்படி நான் சொல்வதை கேட்காமல் நடக்கலாம் என்று அதிகாரத்தை காட்டும் போது தான் சிக்கல் ஏற்படுகிறது.கணவன் செய்வது பிடிக்காமல் மனைவி சண்டை போடுவதும், மனைவி செய்யும் செயல்களை பிடிக்காமல் கணவன் சண்டை போடுவதும் இயல்பாகவே எல்லா இடங்களிலும் நடக்கிறது. அதனை புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து இருவரும் சென்றால் பிரச்சனைகள் வராது.

மாறாக பழிவாங்க நினைத்தாலோ அல்லது எதிர்பார்த்தபடி துணை வாழ விரும்பாவிட்டாலோ டைவர்ஸ் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இறுதியாக குற்றங்கள் நடைபெறவும் காரணமாக அமைகிறது. ஈரோட்டிலும் அப்படித்தான் அவசரப்பட்ட கணவரால் நடந்துள்ளது.
ஈரோடு அருகே உள்ள சித்தோடு வாய்க்கால் மேடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த 40 வயதாகும் கோபால் வெல்டிங் பட்டறை தொழிலாளியாவார். இவருடைய மனைவி மணிமேகலா (28). இவர் சித்தோட்டை அடுத்த பசுவபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கோபால் மணிமேகலா தம்பதிக்கு கோகுல் (10), தமிழினி (7) என்ற 2 குழந்தைகள் இருக்கிறார்கள். கம்பெனியில் வேலை செய்து வந்த போதிலும், மணிமேகலா கல்யாண விழாக்களுக்கு சென்று கேட்டரிங் வேலை செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தன்னுடைய மனைவி மணிமேகலா கேட்டரிங் வேலைக்கு செல்வது கோபாலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.இதன்காரணமாக மணிமேகலா மற்றும் கோபால் தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் விரக்தி அடைந்த மணிமேகலா, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, தனது கணவரை பிரிந்து, அந்த பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை பசுவபட்டியில் மணிமேகலா வேலை பார்த்து வந்த கம்பெனிக்கு கோபால் சென்றிருக்கிறார். பின்னர் அவர் மணிமேகலாவை தனியாக சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்திருக்கிறாராம். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மணிமேகலா மற்றும் கோபால் தம்பதி இடையே கம்பெனியிலேயே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த கோபால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமேகலாவை சரமாரியாக குத்தினாராம். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சை்ககாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிமேகலா பரிதாபமாக உயிரைவிட்டார்.
இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிமேகலாவின் கணவர் கோபாலை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மணிமேகலா உயிரிழந்த நிலையல், தந்தையும் சிறைக்கு போயுள்ளார்.இதனால் அவரது 2 குழந்தைகளும் தாயை இழந்து தவித்து வருகின்றன. தந்தையும் ஜெயிலுக்கு போனதால், மிகவும் சிக்கலான நிலையை குழந்தைகள் எதிர்கொண்டுள்ளனர்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications