ஈரோட்டில் கவிழ்ந்த கார்.. இளம் பெண்ணுக்கு கடைசி நிமிடத்தில்.. கெட்டதிலும் நடந்த நல்லது
ஈரோடு: ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வனஜா என்பவருக்கு ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை கிடைத்து உள்ளது. வேலையில் சேர்வதற்காக வீட்டில் இருந்து சொகுசு காரில் நேற்று கல்லூரிக்கு சென்றுள்ளார். வேலைக்கு முதல் முதலாக சென்ற போது, நாய் குறுக்கே வந்ததால் கனவிலும் நினைக்காத சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
தெருநாய்கள் சாலையில் திடீரென குறுக்கே வந்து விடுவதால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். சாலைகளில் வாகனம் ஓட்டும் யாரை கேட்டாலும் தெருநாய்களின் தொல்லை குறித்து கண்டிப்பாக சொல்வார்கள். அந்த அளவிற்கு தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். ஈரோட்டில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்

ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த துளசிமணி என்பவருடைய மகள் வனஜாவுக்கு 27 வயது ஆகிறது. ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை கிடைத்திருக்கிறது. முதல் நாள் வேலையில் சேர்வதற்காக வீட்டில் இருந்து சொகுசு காரில் நேற்று கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். காரை உதவி பேராசிரியை வனஜாவே ஓட்டிச்சென்றார்.
ஈரோட்டில் இருந்து புறப்பட்டு புறநகர் பகுதியான பெருந்துறை ரோட்டில் பவளத்தாம்பாளையம் பகுதியில் வனஜாவின் கார் சென்றது. அப்போது நாய் ஒன்று காரின் குறுக்கே ஓடியது. இதனால் அவர் நாய் மீது கார் மோதாமல் இருக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கர சத்தத்துடன் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த உடன் காருக்குள் இருந்த 'காற்றுப்பை' (ஏர்பேக்) உடனே செயல்பட்டு திறந்தது.. இதனால் வனஜா அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று வனஜாவை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் ஈரோடு- பெருந்துறை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதவி பேராசிரியை வேலையில் சேர சென்றபோது விபத்தில் இளம்பெண் சிக்கிய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் பரவி வருகிறது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏர்பேக் வேலை செய்யாமல் போயிருந்தால், அசம்பாவிதம் நடந்திருக்கும். நல்ல வேளையாக கார் கட்டுப்பாட்ட இழந்த போது, ஏர்பேக் வேலை செய்ததால் பேராசிரியை வனஜா உயிர் தப்பி உள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications