இரட்டை இலை முடங்கினால் என்ன நடக்கும்? எடப்பாடியின் "பிளான் பி".. ஆஹா செம துணிச்சல்.. அப்போ ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சின்னம் முடங்கிவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலால் சின்னம் முடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுகவில் என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் பா.கி பேட்டி அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்கும் போட்டிக்கு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது.

அதிமுக சார்பாக இரண்டு பேருமே வேட்பாளரை களமிறக்கி தாங்கள்தான் அதிமுகவின் வேட்பாளர் என்று கூறினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணையாளர். எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றால் பி பார்மில் இருவரும்தான் கையெழுத்து போட வேண்டும். அப்படி இருக்கும் போது இரண்டு பேரும் வேறு வேறு வேட்பாளரை நிறுத்தினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும்.

ஒருவேளை சின்னம் முடங்கினால் என்ன நடக்கும்? எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார்? ஓ பன்னீர்செல்வம் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் பா.கி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பதில் அளித்துள்ளார்.

பேட்டி

பேட்டி

அவர் அளித்துள்ள பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காரணமாக, அதிமுக சின்னம் முடங்கும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கு முன்பே கூட சின்னம் முடங்கி உள்ளது. அதிமுகவிற்கு இது ஒன்றும் புதிதல்ல. சின்னம் முடங்கினால் கூட களத்தில் இறங்குவோம் என்று மனநிலைக்கு எடப்பாடி தரப்பினர் வந்துவிட்டனர். அவர் உறுதியாக இருக்கிறார். வெற்றி தோல்வி பிரச்சனை இல்லை. என்னுடைய தனித்தன்மையை காட்டிக்கொள்ள விரும்புகிறார். நான் களத்தில் நிற்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள அவர் நினைக்கிறார். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தான்தான் பாஜகவிற்கு மிகவும் நெருக்கம் என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார்.

குஜராத்

குஜராத்

இதற்காகவே அவர் குஜராத்தில் பொங்கல் விழா கொண்டாட சென்றார். பாஜகவிற்கு நாம் நெருக்கம் என்பதை காட்டிக்கொள்ள அவர் பல முயற்சிகளை செய்து வருகிறார். பாஜகவிற்கு ஓபிஎஸ் நெருக்கமாக இருக்கிறாரா இல்லையா? அவர் டெல்லிக்கு அருகில் இருக்கிறாரா இல்லையா? அதெல்லாம் விஷயம் இல்லை. மக்கள் ஆதரவு, தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். பாஜகவிற்கு நெருக்கமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. மக்கள் செல்வாக்குதான் முக்கியம். அதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பையே வைத்துக்கொள்வோம்.

 நீதிமன்ற தீர்ப்பு

நீதிமன்ற தீர்ப்பு

நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும், சின்னம் யாருக்கு போனாலும் மக்கள் செல்வாக்கு முக்கியம். சின்னம் முக்கியம் என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டே கூட ஜெயலலிதா பர்கூரில் தோல்வி அடைந்து இருக்கிறார். இரட்டை இலை சின்னம் இருக்கும் போது கூட குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் பர்கூரில் வெற்றிபெற்றார். அதேபோல் இரட்டை இலை சின்னம் எம்ஜிஆர் காலத்திலேயே நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கிறது. இரட்டை இலை சின்னம் இல்லாத போது கூட ஜானகியுடன் மோதல் இருக்கும் போது அதிகமான இடங்களை கைப்பற்றியவர் ஜெயலலிதா.

இரட்டை இலை

இரட்டை இலை

எனவே இரட்டை இலையை விட தொண்டர்கள் ஆதரவு, கட்சி வியூகம், மக்கள் ஆதரவு , வேட்பாளர் தேர்வு என்று பல விஷயங்கள் இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெறும். எடப்பாடி தன்னுடைய நகர்வில் உறுதியாக இருக்கிறார். எடப்பாடி வெளிப்படையாக பாஜகவை பகைத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் தனக்கென ஒரு தனித்தன்மை இருக்கிறது. நான் தனியாக செயல்படுவேன் என்பதை எடப்பாடி அடிக்கடி நிரூபித்து வருகிறார். அதுதான் அவருக்கு இருக்கும் பாசிட்டிவ் அம்சம். திமுகவிற்கு மாற்று எடப்பாடி தலைமையின் அதிமுகதான் என்ற நிலைமை வரும். அதுதான் சிறப்பாகவும் இருக்கும்.

ஓபிஎஸ் நிலைமை

ஓபிஎஸ் நிலைமை

இப்போதே ஓபிஎஸ் நிலைமை சரியில்லை. அவர்தான் எடப்பாடியுடன் சேர வேண்டும் என்று நினைக்கிறார். ஓபிஎஸ் எங்கேயாவது கூட்டம் நடத்தினாரா? எடப்பாடி கூட்டம் நடத்தினார். போராட்டம் நடத்தினார். ஆனால் ஓபிஎஸ் ஆக்டிவாக இல்லை. சட்டசபையிலும் எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள். அது மாறவில்லை. 8 மாதங்களாக இது மாறவில்லை. மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். இந்த நம்பர் அப்படியே இருக்கிறது. இந்த நம்பர் ஏறி இறங்கினால் கூட ஓபிஎஸ் பக்கம் ஆதரவு இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை.

ஓபிஎஸ் எதிர்காலம்

ஓபிஎஸ் எதிர்காலம்

இதனால்தான் ஓபிஎஸ் பாஜக பக்கம் நெருக்கமாக இருக்கிறார். தனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. எம்எல்ஏக்கள் பெருமளவில் தன் பக்கம் வரவில்லை என்பதால் பாஜகவை சார்ந்து இருக்கிறார். பாஜக மத்தியில் இருக்கிறது. அவர்கள் சார்பாக இருந்தால் நல்லது நடக்கும் என்று ஓபிஎஸ் நினைக்கிறார். ஆனால் அவர் பாஜகவில் இணைந்துவிடுவாரா என்றால், அது யுகம்தான். எனக்கு அப்படி தெரியவில்லை. எடப்பாடி சில பதவிகளை பெற்றுக்கொண்டு ஒதுங்கி செல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர் வேண்டுமானாலும் பாஜக ஆதரவோடு சின்ன குட்டி கட்சியை உருவாக்கிக்கொண்டு அதில் ஓபிஎஸ் அப்படியே இருந்துவிடும் வாய்ப்புகளும் உள்ளன, என்று மூத்த பத்திரிகையாளர் பா.கி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+