உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்-அப் சேவை; பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவையும் முடங்கியதால் அதிர்ச்சி!
டெல்லி: உலகம் முழுவதும் இன்று இரவு வாட்ஸ்-அப் சேவை திடீரென முடங்கியது. இந்தியா முழுவதும் வாட்ஸ்-அப் சேவை திடீரென முடங்கியது.
இதே போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கியது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த நவீன உலகில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் பொக்கிஷமாக திகழ்ந்து வருவது வாட்ஸ்-அப் செயலி ஆகும். இந்தியாவிலும் வாட்ஸ்-அப் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இதன் மூலம் முக்கியமான தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உலகம் முழுவதும் இன்று இரவு வாட்ஸ்-அப் சேவை திடீரென முடங்கியது. இந்தியா முழுவதும் வாட்ஸ்-அப் சேவை ஒரு மணி நேரத்த்திற்கும் மேலாக திடீரென முடங்கியதால் அதனை பயன்படுத்தி வருபவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாததால் வாட்ஸ்-அப் பயனர்கள் அவதி அடைந்தனர். இது தொடர்பாக பலர் டுவிட்டர் பக்கங்களில் வாட்ஸ்-அப் சேவை முடங்கிய தகவல்களை பகிர்ந்தனர். .இதே போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் பல்வேறு நாடுகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக திடீரென முடங்கியது. இதனால் அதனை பயன்படுத்தி வருபவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். . ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் பரபரப்பும் ஏற்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியதாக இந்த நிறுவங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் தொழில்நுட்ப கோளாறு பின்னர் சரி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்த்திற்கு பிறகு வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் வழக்கம்போல் இயங்கின.












Click it and Unblock the Notifications