"மீனா"வுக்கு இவ்ளோ கோபம் வரக்கூடாது.. அதுவும் பாமாயில்.. பாவம் கார்த்திக்.. துடிதுடிச்சு போயிட்டாராமே
கள்ளக்காதல் விவகாரம் முற்றிவிடவும், இளம்பெண் ஆத்திரத்தில் இளைஞரை தாக்கி உள்ளார்
ஈரோடு: இருந்தாலும் மீனாவுக்கு இவ்ளோ கோபம் ஆகாது.. உடம்பெல்லாம் வெந்துபோய் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார் கார்த்திக். இந்த கார்த்திக் யார் என்றால், இவர்தான் மீனாவின் கள்ளக்காதலன்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.. இங்குள்ள பவானி பகுதியை சேர்ந்தவர்தான் கார்த்திக்.. 27 வயதாகிறது.. இவருக்கு மீனா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
மீனாவும், கார்த்திக்கும் உறவினர்கள்தான்.. அதனால் சொந்தக்கார பெண் என்பதால் அடிக்கடி வீட்டுக்கு வந்து போய் கொண்டிருந்தார்.. மீனாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. ஒரு குழந்தையும் இருக்கிறது.

சந்தேகம்
எனினும், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியே வசித்து வருகிறார்.. இதனால், மீனா வீட்டுக்கு கார்த்திக் எந்தவித தடையும் இன்றி வந்து போயுள்ளார்.. இவர்களின் உறவு கள்ளக்காதலாக மாறி உள்ளது.. 2 பேருமே பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்திருக்கிறார்கள்.. அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்... இந்த நிலையில், மீனாவை விட்டு, கார்த்திக் மெல்ல மெல்ல பிரிய துவங்கினார்.. வீட்டுக்கு வருவதும் குறைந்துபோயிற்று.. திடீரென கார்த்திக் தன்னிடம் தொடர்பை குறைக்கவும், மீனாவுக்கு சந்தேகம் எழுந்தது.

பச்சை துரோகம்
அதனால், கார்த்திக்கை கண்காணிக்க துவங்கினார்.. அப்போதுதான், வேறொரு பெண்ணுடன் கார்த்திக்குக்கு தொடர்பு இருப்பது மீனாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா, கார்த்திக்கிடம் இதைப்பற்றி நேரடியாகவே கேட்டுள்ளார்.. அதற்கு கார்த்திக், அந்த பெண்ணைதான் திருமணம் செய்து கொள்ள போவதாக சொல்லி உள்ளார்.. இதனால் மேலும் அதிர்ந்து போன மீனா, இத்தனை நாளும் தன்னுடன் பழகி துரோகம் செய்துவிட்டு, இன்னொரு பெண்ணை திருமணம் செய்வதா? என்று கேட்டுள்ளார்..

பாமாயில்
அதற்கு கார்த்திக், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறேன் என்று உறுதியாக சொல்லவும், இருவருக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது. வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த மீனா, அடுப்பில் கொதிக்க வைத்திருந்த பாமாயில் எண்ணெய்யை எடுத்துவந்து கார்த்திக் மீது ஊற்றி விட்டார்.. இந்த சம்பவத்தில் கார்த்திக்கின் முகம், வயிறு, தோள்பட்டை பகுதிகள் வெந்துவிட்டன.. எரிச்சலும் வலியும் தாங்க முடியாமல் கார்த்திக் அலறி துடித்து இருக்கிறார்.. இதை பார்த்ததுமே மீனா பயந்துவிட்டார். அதனால் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்..

அலறல் அதிர்ச்சி
கார்த்திக்கின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவரை பவானியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அதற்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றார்கள். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி தப்பி ஓடிய மீனாவை தேடி வந்த நிலையில், அவரை கைதுசெய்துள்ளனர்.. கார்த்திக் திருமணம் செய்ய போகும் பெண், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவராம்..

மீனா மீனா
திருமண செய்தி உறுதியானதுமே, கார்த்திக்குக்கு போனை போட்ட மீனா, முக்கியமான விஷயம் பேசுவதற்காக தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.. அப்போதுதான் கல்யாண பேச்சை எடுத்து, கொதிக்கும் எண்ணையை கொண்டுவந்து கார்த்திக் மீது ஊற்றியிருக்கிறார். இதில், கார்த்திக்குக்கு 15 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.. தொடர்ந்து சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.. நேற்றிரவு 10 மணிக்கு கைதான மீனாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது அவர் வாக்குமூலம் தந்துள்ளார்.

பாமாயில்
அதில், "நானும் கார்த்திக்கும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தோம் அப்போதே எங்களுக்குள் பழக்கம் இருந்தது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்தோம். இப்போது, திடீரென அவர் என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.. அதனால்தான் இது சம்பந்தமாக அவரை வீட்டிற்கு அழைத்து பேசினேன். தகராறு ஏற்பட்டது.. ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் கிச்சனில் கொதித்துக் கொண்டு இருந்த பாமாயில் எண்ணையை எடுத்து அவர் மீது கொட்டினேன்" என்றார்.












Click it and Unblock the Notifications