"VVIP வழியில் உங்களை மட்டும் போலீஸ் ஏன் தடுக்குறாங்க? தவெக வெங்கட்ராமன் சொன்ன பதில் என்ன?
ஈரோடு: "ஏன் போலீஸார் தொடர்ந்து உங்களை காரை மட்டும் தடுத்து நிறுத்துறாங்களே?" என்ற கேள்விக்கு தவெக பொருளாளர் வெங்கட்ராமன் பதில் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே சரளை எனும் ஊரில் தவெக பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் செய்திருந்தார்.

செங்கோட்டையன் செய்திருந்த ஏற்பாடு சிறப்பாக இருந்ததாக தவெக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் காலையில் விஜய்யின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தவெக பொருளாளர் வெங்கட்ராமன் விவிஐபி கேட்டிற்கு சென்றார்.
அப்போது அவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டது. விவிஐபிக்கள் பட்டியலில் கார் பதிவெண் இடம் பெறாததால் வெங்கட்ராமனை உள்ளே அனுமதிக்க முடியாது என போலீஸார் தெரிவித்தனர்.
நான்தான் தவெகவின் பொருளாளர், என்னை எப்படி அனுமதிக்க மறுக்கிறீர்கள் என வெங்கட்ராமன் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது நுழைவு வாயில் வழியாக நடந்து சென்ற புஸ்ஸி ஆனந்தை, வெங்கட்ராமன் அழைத்தும் கண்டுகொள்ளாமல் சென்றார்.
இதையடுத்து அங்கிருந்த தனியார் நிறுவன பாதுகாவலர் வெங்கட்ராமனை அடையாளம் கண்டு கொண்டு போலீஸிடம் சொன்னதும் அவர் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டம், மாமல்லபுரத்தில் நடந்த கூட்டம் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது 3-ஆவது முறையாக வெங்கட்ராமனை போலீஸார் ஈரோட்டில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வெங்கட்ராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், செங்கோட்டையன் இங்கு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருக்கிறார். போலீஸாரும் இந்த கூட்டத்திற்கு தங்கள் ஒத்துழைப்பை தருகிறார்கள் என்றார்.
அப்போது அவரிடம் "ஏன் சார் உங்கள் வாகனம் மட்டும் எப்போதும் தடுத்து நிறுத்தப்படுகிறது" என கேள்வி எழுப்பியதற்கு வெங்கட்ராமன் சிரித்துக் கொண்டே, "புதுசா பண்றாங்கல்ல, அப்படித்தான் இருப்பாங்க" என்றார். அதற்கு செய்தியாளர்கள் "நீங்கள் புஸ்ஸி ஆனந்தை அழைத்தும் அவர் கண்டுக்கலையே" என கேட்டதற்கு, "நான் புஸ்ஸி ஆனந்தை கூப்பிடவில்லை, கட்சி நிர்வாகிகளைத்தான் கூப்பிட்டேன்" என்றார்.
இந்த ஈரோடு பொதுக் கூட்டம் குறித்து விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.
அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.
அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நம் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நம் கழகப் பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் அவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.பாலாஜி http://B.Com, ஈரோடு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.வெங்கடேஷ் B.E., MBA, ஈரோடு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.பிரதீப்குமார் DCE ஆகியோருக்கும் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்!
வெற்றி நிச்சயம்! இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியிருந்தார்.
-
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..












Click it and Unblock the Notifications