முதல் "விக்கெட்" காலி.. திமுகவில் வலையை வீசிய பாஜக.. சிக்கிய "ஆதார மீன்".. இது மொடக்குறிச்சி ஷாக்

மொடக்குறிச்சி திமுக கவுன்சிலர் பாஜகவில் இணைந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: திமுகவுக்கு ஒரு ஷாக் செய்தி, மொடக்குறிச்சியில் இருந்து பறந்து வந்துள்ளது.. அந்த அளவுக்கு கனகச்சிதமாக காய் நகர்த்தி உள்ளது தமிழக பாஜக..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சில குறிப்பிட்ட இடங்கள், பதவிகள் வேண்டும் என்று கேட்டு தலைமையிடம் கூட்டணி கட்சிகள், லிஸ்ட் தந்திருந்தன..

அதன்படியே, கூட்டணி கட்சிகள் எங்கு வலுவாக உள்ளனவோ, அந்த இடங்களையும் திமுக மேலிடம் ஒதுக்கி தந்திருந்தது..

திருமாவளவன்

திருமாவளவன்

ஆனால், ஆங்காங்கே உள்ள ஆளும் கட்சியினர், போட்டி வேட்பாளர்களை நிறுத்தி, கூட்டணி கட்சிகளுக்கான பதவிகளையும் கைப்பற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டனர்.. பிறகு திருமாவளவன் இதுகுறித்து ஓபனாகவே செய்தியாளர்கள் கூட்டத்தில் குமுறினார்.. திமுகவினர் செய்த அராஜகங்களை குற்றஞ்சாட்டி வேதனை தெரிவித்தார்.. இப்படி கூட்டணி கட்சிகள் அடுத்தடுத்து கொடுத்த நெருக்கடி காரணமாக, முதல்வர் ஸ்டாலின் அதிர்ந்து போனார்.. பதவியேற்ற அனைவரையும் உடனடியாக பதவியை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார்.

 முதல்வர் விதித்த கெடு

முதல்வர் விதித்த கெடு

அதற்கான கெடுவையும் விதித்துள்ளார்.. ஆனால், பெரிய அளவில் அந்த உத்தரவை திமுகவினர் மதிக்கவில்லை என்றே தெரிகிறது.. சிலர் இன்னமும் பதவியை ராஜினாமா செய்யவில்லை.. இதனால், கூட்டணி கட்சிகள் மேலும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளன.. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களை ராஜினாமா செய்ய சொன்ன, திமுக மேலிடம் மீது சில கவுன்சிலர்கள் அதிருப்தியிலும் உள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தன...

 மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி

இப்படிப்பட்ட சூழலில்தான், திமுகவுக்கு ஷாக் தந்துள்ளார் ஒரு மொடக்குறிச்சி கவுன்சிலர்.. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த கிளாம்பாடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.. இதில் திமுக 11 வார்டுகளிலும், அதிமுக, பாஜக தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் இரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

 சி.சரஸ்வதி

சி.சரஸ்வதி

திமுக சார்பில் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டி.சுரேஷ்குமார், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ, சி.சரஸ்வதி முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார்... இந்நிகழ்ச்சியில், பாஜக ஒன்றிய தலைவர் சேகர், எஸ்.டி.செந்தில்குமார், கவுன்சிலர் ஜெகதாம்பாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாஜகவில் இப்படி இணைந்தது பற்றி டி.சுரேஷ்குமார் சொல்லும்போது, கூறும்போது, "நாட்டு நலனுக்கான கட்சியாக பாஜக விளங்குவதால் அந்த கட்சியில் இணைகிறேன்" என்று காரணம் கூறியுள்ளார்.

 கவுன்சிலர்கள்

கவுன்சிலர்கள்

நடந்து முடிந்த தேர்தலில் எத்தனையோ சுயேச்சை கவுன்சிலர்கள், வெற்றி பெற்ற கையோடு திமுகவில் வந்து இணைந்தனர்.. ஆனால், வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் பாஜகவில் இணைந்துள்ளது பெருத்த அதிர்ச்சியாக உள்ளது.. ஏற்கனவே அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் பாஜக இறங்கிவரும்போது, தானாகவே வலையில் போய் சிக்கி கொள்கின்றன சில "ஆதாய மீன்கள்"..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+