"கேம் சேஞ்சர்".. அடித்து தூக்கும் நாம் தமிழர்.. ஈரோடு கிழக்கில் ஆட்டத்தையே மாற்ற போகிறது? பின்னணி!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக போன்ற பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. மற்ற பெரும்பாலான கட்சிகள் இந்த தேர்தலில் இருந்து பின்வாங்கி உள்ளன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்து வருகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் உச்சம் பெற்றுள்ளது. இன்று வேட்பாளர்கள் பெயர்கள் இறுதி செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு தற்போது இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக - திமுக
இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக யார் போட்டியிடுவது என்ற பெரிய குழப்பம் நிலவி வந்தது. ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததாலும், பாஜக கேட்டுக்கொண்டதால் ஓ பன்னீர்செல்வம் தற்போது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

அதிகாரப்பூர்வ வேட்பாளர்
தாக்கல் செய்ததோடு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அவர் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அமமுக அறிவித்துள்ளது. தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அமமுக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அறிவித்துவிட்டது. பாஜகவும் கூட அதிமுகவின் பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி விட்டது. ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டாம். அதிமுகவின் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்று பாஜக முடிவு எடுத்துள்ளது. ஈரோடு-கிழக்கில் நம் தோழமை கட்சியான அதிமுகவின் பெரும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை
இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன், என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தேர்தல் கிட்டத்தட்ட திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி vs தேமுதிக vs நாம் தமிழர் இடையிலான மோதலாக பார்க்கப்படுகிறது.

வாக்கு வங்கி
இதனால் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் கேம் சேஞ்சராகும் நிலை ஈரோட்டில் உள்ளது. பின்வரும் வாக்கு சதவிகிதத்தை பார்த்தாலே கடந்த தேர்தலில் நாம் தமிழர் எவ்வளவு சிறப்பாக செயலாற்றியது, தேர்தல் முடிவுகளை மாற்றியது என்பது தெரிய வரும். கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கில் பெறப்பட்ட வாக்கு விவரம்,

தேர்தல்
கடந்த தேர்தலில் நாம் தமிழர்தான் தேர்தல் முடிவுகளை மாற்றியது என்று கூட கூறலாம். 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார். அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை விட 9 ஆயிரம் வாக்குகள் மட்டும் அதிகம் வாங்கி இவர் வெற்றிபெற்றார். இதில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 11,629 , இவர்களின் வாக்குகள் சிதறி இருந்தால் தேர்தல் முடிவும் மாறி இருக்கும். இந்த நிலையில் தற்போது மோதல் 4 முனையாக மாறி உள்ளதால் மீண்டும் நாம் தமிழர் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்த முறை மக்கள் நீதி மையம் பெற்ற வாக்குகள் 10005. இந்த முறை மக்கள் நீதி மய்யம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லும்.

நாம் தமிழர் கட்சி
இதனால் நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகளை பிரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கே நெருக்கமான மோதல் நடைபெற வாய்ப்பு இல்லை. அப்படி நடைபெறும் பட்சத்தில் நாம் தமிழர் இங்கே முக்கிய ரோலை பெற வாய்ப்பு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications