அருந்ததி சர்ச்சை + சீமான் பேச்சு.. எல்லாம் போச்சு.. ஈரோடு கிழக்கில் நாம் தமிழருக்கு பெரிய அடி.. பரபர

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகளை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அந்த கட்சி கடும் பின்னடைவை சந்தித்து உள்ளது. ஈரோடு கிழக்கில் மூன்றாவது பெரிய கட்சியான நாம் தமிழர் இந்த முறை கடுமையான சரிவை சந்தித்து உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து அதிமுக சார்பாக கேஎஸ் தென்னரசு போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் போட்டியிட்டார். முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் 11000 வாக்குகளை கடந்து முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 3900 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 370 வாக்குகளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தேமுதிக வெறும் 73 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது. நாம் தமிழர் இந்த முறை டெபாசிட் பெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

4 முனை போட்டி

4 முனை போட்டி

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் 4 பிரதான கட்சிகள்தான் போட்டியிட்டன. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக தவிர இன்னொரு பிரதான கட்சி என்றால் அது நாம் தமிழர்தான். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அமமுக அறிவித்தது. தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அமமுக அறிவித்தது. அதேபோல் இந்த தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அறிவித்துவிட்டது. பாஜகவும் கூட அதிமுகவின் பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி விட்டது. ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டாம். அதிமுகவின் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்று பாஜக முடிவு எடுத்துள்ளது. ஈரோடு-கிழக்கில் நம் தோழமை கட்சியான அதிமுகவின் பெரும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போட்டி எப்படி?

போட்டி எப்படி?

இதனால் ஈரோடு கிழக்கு தேர்தல் கிட்டத்தட்ட திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி vs தேமுதிக vs நாம் தமிழர் இடையிலான மோதலாக பார்க்கப்படுகிறது. இதனால் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் கேம் சேஞ்சராகும் நிலை ஈரோட்டில் உள்ளது. பின்வரும் வாக்கு சதவிகிதத்தை பார்த்தாலே கடந்த தேர்தலில் நாம் தமிழர் எவ்வளவு சிறப்பாக செயலாற்றியது, தேர்தல் முடிவுகளை மாற்றியது என்பது தெரிய வரும். கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கில் பெறப்பட்ட வாக்கு விவரம்,

நம்பர் 1 - காங்கிரஸ் - திருமகன் ஈவெரா- 67,300 வாக்குகள் - 44.27 வாக்கு சதவிகிதம்
நம்பர் 2- தமிழ் மாநில காங்கிரஸ் - யுவராஜா எம்.- 58,396 வாக்குகள் - 38.41 வாக்கு சதவிகிதம்
நம்பர் 3- நாம் தமிழர் - கோமதி - 11,629 வாக்குகள் - 7.65 வாக்கு சதவிகிதம்
நம்பர் 4- மக்கள் நீதி மய்யம் - ராஜ் குமார் - 10,005 வாக்குகள் - 6.58 வாக்கு சதவிகிதம்

தேர்தல்

தேர்தல்

கடந்த தேர்தலில் நாம் தமிழர்தான் தேர்தல் முடிவுகளை மாற்றியது என்று கூட கூறலாம். 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார். அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை விட 9 ஆயிரம் வாக்குகள் மட்டும் அதிகம் வாங்கி இவர் வெற்றிபெற்றார். இதில் நாம் தமிழர் பெட்ரா வாக்குகள் 11,629 , இவர்களின் வாக்குகள் சிதறி இருந்தால் தேர்தல் முடிவும் மாறி இருக்கும். இந்த நிலையில் தற்போது மோதல் 4 முனையாக மாறி உள்ளதால் மீண்டும் நாம் தமிழர் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்த முறை மக்கள் நீதி மையம் பெற்ற வாக்குகள் 10005. இந்த முறை மக்கள் நீதி மய்யம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு சென்றுள்ளது.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி

இதனால் நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகளை பிரிக்கும் என்ற கேள்வி எழுந்தது. இங்கே நெருக்கமான மோதல் நடைபெற வாய்ப்பு இல்லை. அப்படி நடைபெறும் பட்சத்தில் நாம் தமிழர் இங்கே முக்கிய ரோலை பெற வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் தேர்தல் பிரச்சார சமயத்தில் நாம் தமிழர் கட்சி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. அதிலும் சீமான் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விஷயங்கள் எல்லாம் பெரிய அளவில் சர்ச்சையாகின. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அருந்ததியர்களுக்கு எதிராக பேசியது கடும் விமர்சனங்களை சந்தித்தது. நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக இரண்டு நாட்களுக்கு முன் சீமான் பிரச்சாரம் செய்தார். மேனகா முதலியார் ஜாதியை சேர்ந்தவர். அதனால் முதலியார் ஜாதி பற்றி பேசிய சீமான், முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார்.

மோதல்

மோதல்

போர் நடந்தால் முதலில் வேல் ஏந்தி வரும் மக்கள்தான் முதலியார். அவர்களை தூய்மை பணி செய்ய விஜய நகர பேரரசை சேர்ந்த தெலுங்கன். அவர்கள் வரவில்லை என்றதும் வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் எனவும் சீமான் பேசினார். அதாவது ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு பேசும் தூய்மை பணியாளர்கள்தான் அருந்ததியர்கள் என்று சீமான் கூறினார். அவரின் இந்த பேச்சு காரணமாக ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் அருந்ததியர்கள் போராட்டங்களை செய்து வருகின்றனர். நாம் தமிழர் நிர்வாகிகளை விரட்டி அடித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று மேனகா நவநீதனுக்கு வாக்குகள் சேகரிக்க வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் அருந்ததியர்கள் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கே கை கலப்பு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதனால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த மோதலுக்கு பின் திமுக இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புகார் வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், எங்கள் பேரணியில் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த தாக்குதலுக்கு திமுகதான் காரணம். பயம் அச்சம் காரணமாக திமுகதான் எங்கள் மீது தாக்கல் நடத்தியது, என்று சீமான் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை எல்லாம் மீறி.. லைம்லைட்டில் இருந்தும் கூட நாம் தமிழர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்து டெபாசிட்டை இழந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+