ஈரோடு பொதுக் கூட்டத்தில் இளைஞருக்கு நடந்த சோகம்! பதறி அடித்து மீட்ட போலீஸார்!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடக்கும் தவெக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையிலேயே சரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் விஜயமங்கலம் என்ற பகுதியில் விஜய் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் இன்று நிகழ்கிறது. இந்த பொதுக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் ஏற்பாடு செய்துள்ளார்.

பாதுகாப்பு அடிப்படையில் 40 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவசர தேவைக்காக 40 வாக்கி டாக்கிகள் கொடுக்கப்படும். 24 ஆம்புலன்ஸ்கள், 72 மருத்துவர்கள் , 120 செவிலியர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த ஆம்புலன்ஸ்களில் அனைத்து வசதிகளும் இருக்கும். 2 சின்டெக்ஸ் டேங்குகளில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைல் டாய்லெட்டும் 2 இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. 3 தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.
விஜய் பேசுவதற்கு காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யை காண வருவோருக்கு பாஸ், கியூ ஆர் கோடு எல்லாம் இல்லை. அனைவரும் விஜய்யை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் விழா நடக்கும் இடத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய் கூட்டத்தில் கலந்து கொள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு சாலையில் சரிந்துவிழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் விஜயமங்கலம் கூட்டத்திற்கு தனது வீட்டிலிருந்து சீக்கிரமே புறப்பட்டு, தற்போது கோவையிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சாலை மார்க்கமாக சென்றுக் கொண்டிருக்கிறார். இவர் நேராக தனது பிரச்சார வாகனத்தில் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு பிறகு பிரச்சார நிகழ்வுக்கு செல்வார் என சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications