மீரா.. போலீசிடம் போய்.. அவ்வளவு சவுண்டு விட்டு.. காதலனுடன் ஜாலி.. கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: காதலனுடன் ஜாலியாக இருக்க கொள்ளையடித்த இளம் பெண், பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியில் ஒரு டாக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய போது வசமாக சிக்கி கொண்டார். அவரை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே புது வள்ளியாம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஜோதி வெங்கட்ராமன் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மகள் வித்யா மாதங்கி மருத்துவர் ஆவார். மருத்துவ பணிக்காக அவர் வெளியில் சென்று வருவதால், அவருக்கு 3 வயது குழந்தையை கவனித்துக் கொள்ள வேலைக்கு ஆள் தேவைப்பட்டது.

Young woman arrested fo for robbing boyfriend to have fun in Gopi, Erode district

இதையடுத்து திருச்சி மாவட்டம் உறையூரை மீரா என்கிற பிரதிமீனா (18) என்பவரை மாதம் ரூ.18,000 சம்பளத்துக்காக வேலைக்கு சேர்த்துள்ளார்கள். அவரை வீட்டில் அறையிலேயே தங்க வைத்துள்ளனர். ஆனால் வேலைக்கு சேர்ந்த 4 -வது நாளில் மீரா தனது தந்தை இறந்து விட்டார் என்று கூறி கிளம்பி சென்றார். ஆனால் திரும்பி வரவே இல்லை

ஜோதி வெங்கட்ராமன் பலமுறை மீராவை போனில் தொடர்பு கொண்டு வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார் . ஆனால் மீரா வரமறுத்துவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் மீராவுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று சோதனையிட்டார். அப்போது ரூ.1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஜோதி வெங்கட்ராமன் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . போலீசார் மீராவை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீசாரிடம் வெள்ளிப் பொருட்களை திருடியதற்கான ஆதாரம் இருக்கா? சிசிடிவி இருந்தா காட்டுங்க.. எப்படி என்னை குற்றவாளி என சந்தேகப்படலாம் என பொறிந்து தள்ளிவிட்டார்.

ஆனாலும் அசராத போலீசார் அவரிடம் கைரேகை பதிவுகளை எடுத்து விசாரணை நடத்தப் போவதாக அறிவித்தனர். அத்துடன் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். இதையடுத்து உண்மையை ஒப்புக்கொண்ட மீரா, காதலனுடன் ஜாலியாக இருக்க திருடியதாக தெரிவித்தார். இது தொடர்பாக மீரா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் எனக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிறிய கிராமம் ஆகும்.

என்பெற்றோர் பிழைப்புக்காக திருச்சி வந்தார்கள். நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். அதன் பிறகு படிப்பு வராததால் வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டார்கள். எனக்கு ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் சொந்த வீட்டிலேயே பணத்தை திருடி அதனை காதலனுக்கு செலவு செய்தேன். இதனை அடிக்கடி செய்து வந்தேன்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் அவர் திருமணத்துக்காக வைத்திருந்த 10 பவுன் நகையை மீரா எடுத்துக்கொண்டு அதனை விற்பனை செய்து காதலனுடன் சுற்றினேன். இதை பெற்றோர் கண்டித்த காரணத்ல் வீட்டை விட்டு வெளியேறி கிடைக்கும் வேலையில் சேர்வேன். அங்கு ஏதாவது திருடி அதைவிற்று காதலுடன் ஜாலியாக செலவு செய்வேன். இப்படி ஒருமுறை திருடிய பணத்தில் காதலனுடன் கேரளா சென்றேன். போலீசார் என்னை மீட்டு சேலத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தப்பிய நான் பெற்றோர் என்னை கொடுமைப்படுத்துவதாக கூறி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.

இதையடுத்து சேலம் கலெக்டர் பெற்றோரை வரவழைத்து என்னை ஒப்படைத்தார். ஆனால் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய நான் ஈரோட்டில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி வேலை தேடி வந்தேன். அப்போதுதான் ஜோதி வெங்கட்ராமன் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என அறிந்து அங்கு சென்றேன். வேலைக்கு சேர்ந்த உடனேயே ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களை திருடினேன். திருடிய வெள்ளிப் பொருட்களை ஈரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்றேன். அதற்காக ரூ.86 ஆயிரம் பணத்தை பெற்று காதலனுடன் ஜாலியாக செலவு செய்தேன்" இவ்வாறு கூறினார்.

இதனிடையே மீராவின் அறையை சோதித்த போது 14 இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நகைகளை அடகு வைத்த ரசீதுகள் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீராவை விசாணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர். மீராவின் காதலனை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+