எதிர்நீச்சல்: குணசேகரனால் தான் கயல்விழி இறந்தார்.. உண்மையை சொன்ன ஈஸ்வரி.. ஜீவானந்தத்தின் அதிரடி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 16ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
இதில் குணசேகரன் மற்றும் கதிரால்தான் ஜீவானந்தத்தின் மனைவி இறந்தார் என்ற உண்மையை ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் சொல்கிறார்.

அதே நேரத்தில் சக்தி மற்றும் ஜனனி இடையே பிரச்சனை வருகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அடுத்த திருப்பம் வந்திருக்கிறது. ஏற்கனவே அடுத்து ஆதி குணசேகரன் யார் என்று கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்பும் அது பற்றிய பில்டப்புகளும் அதிகமாக இருந்த நிலையில் கடைசியாக வேலராமமூர்த்தி ஆதி குணசேகரன் ஆக அறிமுகம் ஆகி இருந்தார். இதனால் அந்த எபிசோடு டிஆர்பி யில் முதல் இடத்தை பெற்றிருந்தது.
அதைத் தொடர்ந்து குணசேகரன் திடீரென்று ஜெயிலுக்கு போவது போன்று கதையை வைத்திருக்கின்றனர். இன்னும் ஏழு நாட்களுக்கு குணசேகரன் ஜெயிலில் இருப்பார் என்றும் அதற்குள் ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவின் கதையை முடிக்க வேண்டும் என்றும் குணசேகரன் மூலமாக வக்கீல் கதிர் மற்றும் ஞானத்திடம் கூறியிருந்தனர். இதனால் கதிர் அடுத்தடுத்து தன்னுடைய பிளான்களை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடு வக்கீல் மூலமாக குணசேகரன் கதிரை கிள்ளிவளவனை போய் பார்க்கச் சொல்லி இருந்தார். இதனை கேள்விப்பட்ட ஞானம் எதற்காக கிள்ளிவளவனை இவன் சந்திக்க வேண்டும் என்று கேள்வி கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவை கோவில் திருவிழா அன்று அப்பத்தா நடத்தும் பங்க்ஷனில் வைத்து கொலை செய்வதற்காக கதிர் ப்ளான் போட்டுக் கொண்டிருக்க இதை எல்லாம் மாடியில் நின்று ஈஸ்வரி கேட்டிருந்தார்.
இந்த நிலையில் தான் அவசரமாக வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று வீட்டை விட்டு ஈஸ்வரி கிளம்பி ஜீவானந்தம் வீட்டிற்கு வந்திருந்தார். அதே நேரத்தில் கம்பெனி தொடங்குவதிலும் சிறு பிரச்சனை இருப்பதால் நாங்களும் வெளியே போயிட்டு வருகிறோம் என்று சக்தியும் ஜனனியும் வெளியே கிளம்பி இருந்தனர். இப்படியாக நேற்றைய எபிசோடு இருந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் சக்தியும் ஜனனியும் ரோட்டில் சென்று கொண்டிருக்கின்றனர்.

அப்போது சக்தி ஜனனியிடம் கம்பெனியை தொடங்குவதற்கு முன்பே இத்தனை பிரச்சனை வருகிறது. அப்படி என்றால் இந்த கம்பெனி முக்கியமா? என்று கேட்க, அதற்கு கோபமான ஜனனி அதற்காக அப்படியே நம்ம விட்டுட முடியுமா? என்று கேட்க இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜீவானந்தத்திடம் ஈஸ்வரி நீங்க கண்டிப்பா அந்த பங்க்ஷனில் கலந்து கொள்ள வேண்டுமா? என்று கேட்க,
அதற்கு ஜீவானந்தம் நான் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு தயங்கி தயங்கி யோசித்து கொண்டு இருக்கும் ஈஸ்வரி பிறகு முகத்தை திருப்பி நின்று கொண்டு ஜீவானந்தத்திடம் உங்க மனைவி கயல்விழியை கொலை செய்தது என்னுடைய புருஷன் குணசேகரனும் கதிரும் தான் என்று சொல்ல ஜீவானந்தம் அதிர்ச்சியாகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இன்றைய எபிசொட்டில் பெரும் பஞ்சாயத்தும் திருப்பங்களும் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications