பிளாஷ்பேக்:பாகிஸ்தான் போட்டி.. ஜடேஜாவால் கோபத்தில் கத்திய பாண்டியா! 5 ஆண்டு கழித்து அசத்திய அதே ஜோடி
துபாய்: கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா - ஜடேஜா மீது மைதானத்திலேயே கோபப்பட்ட நிலையில், இன்று அதே இணை ஒன்றிணைந்து பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி. என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என பல தொடர்களை ரசிகர்கள் கண்டுகளித்தால் அனைவரும் அதிகம் எதிர்பார்ப்பது ஒன்றைதான்.
அதுதான் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி. பல்வேறு அரசியல் காரணங்களால் இருநாடுகளிடையே நேரடி தொடர் போட்டிகள் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

ஆசிய கோப்பை
கடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ரிஜ்வான் 43 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

இந்தியா அசத்தல் பந்துவீச்சு
முஹம்மது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இல்லை என்று குறை இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தினர். குறிப்பாக புவனேஷ்வர் குமாரும் ஹர்திக் பாண்டியாவும். புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுக்க, ஹர்திக் பாண்டிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா அதிர்ச்சி தொடக்கம்
பாகிஸ்தான் அணி 147 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய இந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகவிட, கேப்டன் ரோகித் ஷர்மாவும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி மட்டும் நிதானமாக ஆடி 35 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

ஜடேஜா - பாண்டியா ஜோடி
அடுத்து களமிறங்கிய ஜடேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் பின்னர் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார் ஹர்திக் பாண்டியா. பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலக்கை நோக்கி நகர்ந்தனர்.

2017 சாம்பியன்ஸ் டிராபி
இந்த காட்சி கடந்த 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை நினைவுப்படுத்துகிறது. அதிலும் இந்திய அணி ரன் சேசிங்கில் ஈடுபடும்போது மேல் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின் வரிசையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 76 ரன்களை குவிப்பார்.

ஃபினிஷர் பாண்டியா
இறுதி ஓவரில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஜடேஜா அவுட்டாக நவாஸ் ஓவரின் 4 வது பந்தில் அசத்தல் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியை இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஃபார்ம் அவுட், காயம் என்று இந்திய அணியில் தொடர்ந்து சேர்க்கப்படாமல் இருந்து பாண்டியா மீண்டும் வந்து மிரட்டலான ஆட்டத்தை காட்டி தன்னை நிரூபித்து இருக்கிறார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications