அந்த 5 நிமிடத்தை கடந்திருந்தால் பிழைத்திருப்பார்: பிபின் ராவத் விபத்து சோகம்
சூலூரிலிருந்து புறப்பட்டு வெலிங்டன் ராணுவ தளத்திற்கு செல்லும்போது விமான விபத்தில் சிக்கி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் சேரும் இடத்திற்கு செல்லும் கடைசி 5 நிமிடங்களை கடந்திருந்தால் விபத்தில் பிழைத்திருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

ஹெலிகாப்டர் விபத்து
இன்று காலை முக்கிய நிகழ்ச்சிக்காக முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என 14 பேர் கோவை சூலூரிலிருந்து வெலிங்டன் ராணுவதளத்துக்கு எம்.ஐ சீரிஸ் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முப்படை தளபதி கதி என்ன?
இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டாலும் அவர் என்ன ஆனார் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. ஹெலிகாப்டர் விபத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முறையான காரணம் விரிவான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

விபத்து நடந்ததற்கு முன்
இன்று காலை நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில் கலந்துக்கொள்வதற்காக முப்படை தளபதி பிபின் ராவத் ராணுவ உயர் அதிகாரிகளுடன் டெல்லியிலிருந்து கிளம்பி சூலூர் வந்துள்ளார். அவர் வந்தது அதே எம்.ஐ 17 வி- 5 ரக ஹெலிகாப்டரே. அவர் காலையில் டெல்லியிலிருந்து புறப்பட்ட அதே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது.
எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் விவிஐபிக்கள் பயன்பாட்டுக்கு பாதுகாப்பாக உள்ள ஹெலிகாப்டர் ஆகும். டெல்லியில் இந்த ஹெலிகாப்டர் புறப்படும் முன் கடுமையான சோதனைக்கு பின்னரே புறப்பட்டுள்ளது. மேண்டேட்ரி செக் எனப்படும் மெக்கானிக்கல் சோதனைகள் அனைத்தும் செய்யப்படும். பொதுவாக பயணத்துக்கு முன் ஹெலிகாப்டர் பரிசோதிக்கப்படும். அதிலும் முப்படை தளபதி பயணம் செல்வதற்கு முன் கூடுதல் சோதனைக்கு பின்னரே புறப்பட்டிருக்கும். இதில் மனித ஆற்றலை மீறி ஹெலிகாப்டர் கிளம்பிய பின்னர் ஏதேனும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

சூலூரிலிருந்து காலையில் புறப்பட்ட ஹெலிகாப்டர்
டெல்லியிலிருந்து கோவை மாவட்டம் சூலூருக்கு வந்தப்பின் காலை 10-40 க்கு வெலிங்கடன் நோக்கி புறப்பட்டுள்ளனர். குன்னூருக்கு அருகே காட்டேரி என்கிற மலைப்பாதைக்கு அருகே செல்லும் முன் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. விபத்துக்கு முன் ஹெலிகாப்டர் தடுமாறியதாகவும் மரத்தின் மீது மோதியதாகவும் நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். விமானத்தை இயக்குபவர் முக்கியமாக விவிஐபிக்களுக்கு விமானத்தை இயக்குபவர்கள் மிகுந்த திறமையுள்ள விமானிகளாகத்தான் இருப்பார்கள், குரூப் அளவில் தலைமைதாங்கும் அளவிலான விமானியாகத்தான் இருப்பார் என்கின்றனர் நிபுணர்கள்.

சிக்னல் டிராப் ஆனதால் விபத்தா?
சிக்னல் ட்ராப் ஆனதால் விபத்து என்பதை நிபுணர்கள் ஏற்க மறுக்கின்றனர். சிக்னல் இல்லாவிட்டாலும் எஸ்.ஓ.பி எனப்படும் ஸ்டாண்டர்ட் ஆபரேஷன் ப்ரொசீஜர் மூலம் திறமை வாய்ந்த விமானி குறிப்பிட்ட இடத்திற்கு எளிதாக செல்ல முடியும். அதுவுமல்லாமல் நூறு முறைக்கு மேல் இதே பகுதியில் இக்குறிப்பிட்ட ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார் பைலட்.

அந்த 5 நிமிடம் கடந்திருந்தால்
11.47 க்கு சூலூரிந்து வெலிங்டனுக்கு பயணம் செய்த ஹெலிகாப்டர் வெலிங்டன் ராணுவ முகாமை அடைய 10 கி.மீ முன் உள்ள காட்டேரி எனும் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 12.20 க்கு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஐந்து நிமிடம் கடந்திருந்தால் 12.25 க்கு அவர்கள் ஹெலிகாப்டர் ராணுவ தளத்தை அடைந்திருக்கும், புறப்பட்ட நேரத்திலிருந்து சரியாக வந்த ஹெலிகாப்டர் 30 நிமிடங்கள் கழித்து விபத்தைச் சந்தித்துள்ளது. இன்னும் 5 நிமிடம் கடந்திருந்தால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாமை அடைந்திருப்பார்கள் என்பதே சோகமான செய்தி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications