கடலூர் சிறுவன்.. 1 வயசுதான்.. இதயத்தில் பெரிய பிரச்சினை.. உதவுங்களேன்
கடலூர்: 1 வயதாகும் ஆண் குழந்தை பிரபாகரனின் இதய அறுவை சிகிச்சைக்கு அனைவரும் உதவ வேண்டுகிறோம்.

கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டையை சேர்ந்த குமார்- சுமதி ஆகியோரது மகன் பிரபாகரன். குமார் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார். சுமதி வீட்டு பணிகளை கவனிக்கிறார்.

இவர்களுக்கு மூத்த மகன் ஒருவர் உள்ளார். ஓராண்டுக்கு முன்னர் புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனையில்தான் பிரபாகரன் பிறந்தார். இந்த குழந்தை பிறந்தது முதலே மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது.

இதனையடுத்து குழந்தையின் உடல்நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள் இதயத்தில் பிரச்சனை இருப்பதை தெரிவித்தனர். இதனால் பிரபாகரனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கூலித் தொழிலாளியான குமாருக்கு அறுவை சிகிச்சைக்கான பணத்தை செலுத்த முடியவில்லை.

இதனால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு செல்லுமாறு சில நண்பர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். TAPVC, Restrictive ASD, Multiple Muscular VSDs, S/p PA Band ஆகிய பிரச்சனைகள் பிரபாகரனுக்கு உள்ளன. இதற்கான சிகிச்சைக்கு ரூ3,60,000 தேவைப்படுகிறது.

இந்த அவசரமான சூழ்நிலையில் பொதுமக்களாகிய உங்களது அவசியமான, அவசரமான உதவி தேவைப்படுகிறது.












Click it and Unblock the Notifications