Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

11 மாத பிஞ்சு குழந்தை.. இதயத்தில் பிரச்சினை.. மனமிருந்தால் உதவலாம் பிளீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 11 மாத குழந்தையான அஜய்க்கு இதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி தேவைப்படுகிறது. நீங்கள் மனது வைத்தால், அந்த சிறுவனை காப்பாற்ற உதவலாம்.

வட சென்னையின், சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதாகும் அசோக் குமார். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதியின், முதல் குழந்தை பிறந்து 4 வருடங்கள் கழித்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி, இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அஜய் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

Help 11 Month old Ajay recover from heart problem

அஜய் பிறந்ததுமே, உடல்நலக்குறைவால் ஆபத்தான கட்டத்திற்கு சென்றார். இதையடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இங்குபேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதுதான், அஜய்க்கு தொண்டை மற்றும் இதயத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

Help 11 Month old Ajay recover from heart problem

இதய சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார் அஜய். அசோக் குமார், குடோனுக்கு லோடு ஏற்றும் தொழிலாளி. அவரிடம், மருத்துவ சிகிச்சைக்கு செலவிட பணம் இல்லை.

Help 11 Month old Ajay recover from heart problem

ஆனால் எவ்வளவு விரைவாக இந்த அறுவை சிகிச்சை செய்கிறார்களோ, அவ்வளவு நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். Tetralogy of Fallot, Sub Arterial VSD (Oriental TOF Type), Severe Cyanosis with spells என்று அழைக்கப்படும் இந்த இதய நோய் அறுவை சிகிச்சைக்கு, மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு, பரிசோதனைகள் செய்ய என மொத்தம் சுமார் ரூ.3,00000 செலவிட தேவையுள்ளது.

எனவே உங்களால் முடிந்த உதவிகளை செய்து குழந்தையை காப்பாற்றுங்களேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+