ஓசூரில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஓசூரில் 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 35 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி, கணவர் உயிரிழந்த நிலையில் கெலமங்கலத்தில் தனது மகள் வீட்டில் மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறி ஓசூர் பேருந்து நிலைய பகுதியில் படுத்து உறங்கி அங்கு வரும் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

hosur crime


இந்த நிலையில் நேற்று மாலை பேருந்து நிலைய பகுதியில் சுற்றித் திரிந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டியை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபரை தேடி வந்த நிலையில், பாகலூர் சாலை உளியாலம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (35) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+