கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்!
கணவனை கரன்ட் வைத்தே கொல்ல முயன்ற மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்
Recommended Video
ஓசூர்: ஜோதிக்கு ரொம்பதான் தைரியம்.. தன் கள்ளக்காதலுக்கு புருஷன் தொந்தரவாக இருந்தததால், கரண்ட் வெச்சே அவரை கொல்ல பார்த்துள்ளார்!
ஓசூரை அடுத்த நாட்றம்பாளையத்தை சேர்ந்த சின்னராஜ் - ஜோதி. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 7 வருஷங்கள் ஆகின்றன. 6 வயசில் ஒரு மகன் உள்ளான்.
இவர் ஓசூர் அருகே பெத்த பேளக்கொண்டப்பள்ளியில் கடந்த 2 மாதங்களாக வசித்து வருகிறார். கல்குவாரியில் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் சின்னராஜ்.

தகராறு
நேற்று முன்தினம் ராத்திரி, வேலை முடிந்து சின்னராஜ் வீட்டு வந்தார், அப்போது ஜோதி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வாட்டர் ஹீட்டர்
இந்நிலையில், இன்று விடிகாலை, சின்னராஜ் வீட்டில் அசந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஜோதி மற்றும் 5 பேர் சேர்ந்து சின்னராஜை கரண்ட் செலுத்தி கொல்ல முயன்றுள்ளனர். அதாவது பக்கெட் தண்ணிக்குள் போட்டு சூடுபடுத்தும் சுருள் கம்பி அமைப்பில் உள்ள வாட்டர் ஹீட்டரை வைத்துதான் இந்த கொலை முயற்சி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

5 பேர் தப்பி ஓட்டம்
சின்னராஜின் மீது 4 பேர் ஏறி உட்கார்ந்து, அவரது கை, கால்களை இறுக்கி பிடித்து கொள்ள, மற்றொருவர் "வாட்டர்ஹீட்டர்" மூலம் சூடு வைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் வலியால் அலறினார் சின்னராஜ். இந்த சத்தம் கேட்டு, ஜோதி உட்பட 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

தலைமறைவு
கொலை முயற்சியில் இருந்து சின்னராஜ் தப்பிவிட்டாலும், உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அக்கம்பக்கத்தினர் சின்னராஜை உடனடியாக ஓசூர் அரசு ஆஸ்த்திரியில் கொண்டு போய் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜோதி உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். எ
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications