ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட 1% கூட நோ சான்ஸ்... ஓசூரில் இபிஎஸ் திட்டவட்ட அறிவிப்பு
ஓசூர்: அண்ணா திமுகவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்க்கப்படுவதற்கு 1% கூட வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் இபிஎஸ் பிரிவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இபிஎஸ் பங்கேற்றார்.
அப்போது பேசிய இபிஎஸ், லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வர வாய்ப்புள்ளது. இந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும். இரு தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுகவின் அவல ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.

அதிமுகவில் பிளவு இல்லை
மேலும் ஆளும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது; திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. திமுக உட்கட்சி பிரச்சனையால் தள்ளாடி வருகிறது. ஆனால் அதிமுக பிளவுபட்டுவிட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

இந்தியை திணித்த காங்கிரஸ்
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதுதான் இந்தி மொழி திணிக்கப்பட்டது. அதே கட்சியுடன்தானே திமுக கூட்டணி வைத்திருக்கிறது. இந்தி திணிப்பு பற்றி எல்லாம் பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி கிடையாது. அதிமுகவில் ஓபிஎஸ் இணைப்பு என்ற பேச்சுக்கு இடமே கிடையாது. அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவு இறுதியானது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான். என்றும் இபிஎஸ் பேசினார்.

ஓபிஎஸ்-க்கு நோ சான்ஸ்
இதேபோல் ஓசூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் குறித்து விமர்சித்தார் இபிஎஸ். ஓசூர் பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: அதிமுகவை அழிக்க நினைப்பவர் ஓபிஎஸ். அதிமுகவை அழிக்க நினைக்கும் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்படுவதற்கு 1% கூட வாய்ப்பு இல்லை. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக நீக்கப்பட்டவர் ஓபிஎஸ்.

விசுவாசம் இல்லாதவர் ஓபிஎஸ்
ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் அநத வாய்ப்பை வழங்கிய போது எல்லாம் அதிமுகவை அழிக்கத்தான் அவர் முயற்சித்தார். அதிமுக கட்சிக்கும் தொண்டர்களுக்கும் விசுவாசமே இல்லாதவர் ஓபிஎஸ். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications