ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸில் தகதகவென எரியும் தீ! இரவு பணியாளர்களின் நிலை என்ன? முக்கிய அப்டேட்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாகமங்கலம் உள்ள டாடா மின்னணு நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் அதிகளவுக்கு கரும்புகை ஏற்பட்டுள்ளது. அந்த ரசாயனம் சேமிக்கும் பிளாண்டில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அங்குள்ள தொழிலாளர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.
ஓசூரில் நாகமங்கலத்தில் உள்ள டாடா மின்னணு நிறுவனத்தில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இது 500 ஏக்கர் கொண்ட நிறுவனமாகும். இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

ஒரு ஷிப்டிற்கு 1500 பேர் முதல் 2000 பேர் வரை பணியாற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை ரசாயனங்களை சேமித்து வைக்கும் ஒரு யூனிட்டில் இருந்த டேங்க் ஒன்று வெடித்தது. இதனால் அங்கிருந்த ரசாயனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
தகவலறிந்த அந்த நிறுவனத்தின் தீயணைப்பு வாகனம் தீயை அணைக்க போராடி வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி, ஓசூர், தேனிகனிக்கோட்டை, பாகூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கரும்புகை அதிகளவில் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதிக்கு செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் இரவு பணிக்கு சென்றவர்கள், வெளியே வர முடியாததால் பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது. அதே வேளையில் கெமிக்கல் பிளாண்டில் பணியாற்றியவர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் இரு தொழிலாளர்களுக்கு மட்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீவிபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடுத்த ஷிப்ட்டிற்கு வந்தவர்கள் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்ல முடியாத அளவுக்கு தீ கொழுந்து விட்டு எரிவதால் அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து பல லட்சங்கள் சேதமடைந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பொருட் சேதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications