தமிழ்நாடு - கர்நாடகா எல்லை அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: தமிழ்நாடு- கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

அத்திப்பள்ளி வளைவு அருகே தமிழ்நாட்டின் ஓசூர் பேடரப்பள்ளி நவீன் என்பவர் பட்டாசு கடை, குடோன் ஆகியவற்றை நடத்தி வந்தார். இந்த பட்டாசு கடை, குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து பரவியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறி நாலாபுறமும் சிதறின. இந்த விபத்தால் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் பெரும் போராட்டத்துக்கு பின் அணைத்தனர்.

 Firecracker godown accident on Tamilnadu- Karnataka border: Death toll rises to 14

தமிழ்நாட்டை சேர்ந்த 14 பேர் பலி: இத்தீவிபத்தில் முதலில் 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக பலி எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று நள்ளிரவு வரை பலி எண்ணிக்கை 13 ஆக இருந்தது. இன்று காலை பட்டாசு கடை வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் மேலும் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இத்தீவிபத்தில் பலியான அனைவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் பட்டாசு கடை தீ விபத்தால் 7 இரு சக்கர வாகனங்கள், 2 வேன்கள்,சரக்கு மினி லாரி உள்ளிட்டவையும் தீயில் கருகின. அத்துட மதுபான கடைகள், டீ கடை ஆகியவையும் இத்தீவிபத்தில் சேதமடைந்தன.

தமிழ்நாடு, கர்நாடகா முதல்வர்கள் இரங்கல்: இத்தீவிபத்து சம்பவத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு சார்பாக தலா ரூ3 லட்சமும் கர்நாடகா அரசு சார்பாக தலா ரூ5 லட்சமும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் துயரம்: இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மிழ்நாடு - கர்நாடக எல்லையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கி வந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான செய்தியினைக் கேட்டு துயரமடைந்தேன்.

ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை: இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்களை விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவைப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க அனுப்பி வைத்துள்ளேன்.

அமைச்சர்கள் குழு விரைந்தது: மேலும், இந்த சம்பவம் குறித்து நமது தலைமைச் செயலாளர் கர்நாடக மாநில தலைமைச் செயலாளருடன் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களை தமிழ்நாட்டுக் கொண்டு வரவும் உரிய ஏற்பாடுகளை செய்ய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, அமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன் ஆகியோரையும் அனுப்பி வைத்துள்ளேன்.

தலா ரூ3 லட்சம் நிதி உதவி: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட உத்தவிட்டுள்ளேன் என கூறியிருந்தார்.

டிகே சிவகுமார் ஆய்வு: அத்துடன் பட்டாசு கடை தீ விபத்து நிகழ்விடத்தை கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அங்கு முகாமிட்டிருந்த அதிகாரிகளிடம் தீ விபத்து எப்படி ஏற்பட்டது, தீ விபத்து சேதம் உள்ளிட்டவை குறித்தும் டிகே சிவகுமார் கேட்டறிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+