ஓசூர் அருகே அதிகாலையில் பயங்கரம்! அடுத்தடுத்த வாகனங்கள் மோதி 4 பேர் பலி
ஓசூர்: ஓசூரில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் இன்று அதிகாலை நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு வாகனத்தின் மீது பிக்கப் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது சரக்கு லாரி ஒன்று வந்தது. அது ஏற்கெனவே விபத்தில் சிக்கியிருந்த வாகனங்கள் மீது மோதியது. இதில் வேனுக்கும் லாரிக்கும் இடையே கார் சிக்கிக் கொண்டது.
இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 5 பேரில் 4 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டு விட்டார். மற்ற 3 பேர் யாரென தெரியவில்லை. அவர்களது விவரங்களும் சரியாக தெரியவில்லை. இந்த விபத்துக் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 4 உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications