Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியே போனால்.. தமிழ்நாட்டில் அடுத்த நம்பர் 1 நகரம் இதுதான் போல! யோசிக்க முடியாத மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: சென்னையை முந்தும் அளவிற்கு ஓசூரில் பிரம்மாண்டமான வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஓசூரில் விமான நிலையம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மெட்ரோ பணிகள் அங்கே தீவிரம் அடைந்துள்ளன. ஓசூர் - பெங்களூர் மெட்ரோவை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு ஓசூரில் மெட்ரோ அமைப்பதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

அதன்படி பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் நெட்வொர்க் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

bangalore hosur metro

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகளின் கூற்றுப்படி, பொம்மசந்திரா மற்றும் ஓசூர் இடையே 20 கிமீ தூரம் திட்டமிடப்பட்டுள்ளது, இப்போது ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் இருப்பதால், உத்தேசத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தையும் அதனுடன் இணைக்க ஆலோசித்து வருகின்றனர். விமான நிலையம். பொம்மசந்திரா, அத்திபெலே இண்டஸ்ட்ரியல் ஏரியா, அத்திபெலே, சுசுவாடி, நாராயணா ஹெல்த் ஹாஸ்பிடல், சந்தாபுரா, ஓசூர் சிப்காட் ஃபேஸ் I மற்றும் ஓசூர் பேருந்து நிலையம் ஆகியவை மெட்ரோ உடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பு (MRTS) சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிப்பதற்காக ரூ.29.44 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

எப்படி போடப்படும்?: ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பை (MRTS) அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தம் பாலாஜி ரெயில்ரோட் சிஸ்டம்ஸ் மற்றும் ஹபோக் கன்சல்டன்ட்ஸ் ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ரூ.29.44 லட்சம் மதிப்பில் கையெழுத்தானது. அத்திபள்ளி வழியாக ஒசூர் முதல் பொம்மசந்திரா வரை மொத்தம் தோராயமாக 20 கி.மீ நீளத்திற்கு, தமிழ்நாட்டில் 8 கி.மீ மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ. 67601 இருமாநிலங்களுக்கு இடையே விரைவான போக்குவரத்து அமைப்பாக இருக்கும்.

பல்வேறு போக்குவரத்து நெரிசல் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வது, தற்போதுள்ள பயண தேவை மாதிரியை புதுப்பித்தல், 30 ஆண்டு காலத்திற்கான பயணத் தேவையை 5 ஆண்டு இடைவெளியில் கணித்தல் மற்றும் முன்மொழியப்பட்ட வழித்தடத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுதல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

பிளான் என்ன?: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. மு.அ.சித்திக் மற்றும் திட்ட இயக்குநர் திரு.த.அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் திரு.டி. லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் பாலாஜி ரெயில்ரோட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு ஜான் ராஜ்குமார், ஹபோக் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.கே.பி.கோபால்குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பொது மேலாளர்கள் திரு.டி ஜெபசெல்வின் கிளாட்சன், (ஒப்பந்த மேலாண்மை மற்றும் ஒப்பந்த கொள்முதல்), திரு.ஆர்.ரங்கநாதன், (கட்டுமானம்) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்
கலந்து கொண்டனர்.

டெண்டர் கோரிக்கை; இதற்கான முக்கியமான டெண்டர் நேற்று விடப்பட்டு கையெழுத்தானது. பாலாஜி ரெயில்ரோடு சிஸ்டம்ஸ் - சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது (BARSYL) - பெங்களூரின் பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டில் ஓசூர் இடையே மெட்ரோ போக்குவரத்து பாதையை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DFR) தயாரிப்பதற்கான குறைந்த ஏலத்தில் கையெழுத்திட்டது.

பெங்களூரு, கர்நாடகாவில் உள்ள பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டின் ஓசூர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் பாதையை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (டிஎஃப்ஆர்) தயாரிப்பதற்காக 11 நிறுவனங்கள் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நிறுவனத்திடம் ஏலம் சமர்ப்பித்துள்ளன.

மெட்ரோ பணிகள்: இதில்தான் பாலாஜி ரெயில்ரோடு சிஸ்டம்ஸ் - சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது (BARSYL) - பெங்களூரின் பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டில் ஓசூர் இடையே மெட்ரோ போக்குவரத்து பாதையை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DFR) தயாரிப்பதற்காக தேர்வாகி உள்ளது.

மெட்ரோ பாதை: NH-44 இல் சுமார் 18 கிமீ நீளமுள்ள இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பாதை அட்டிபெல்லே வழியாக செல்லும். இதில் 11.5 கிமீ பாதை கர்நாடகாவில் அமைந்துள்ளது மற்றும் மீதமுள்ள 6.5 கிமீ தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையினை சமர்ப்பிக்கும் நிறுவனம், மெட்ரோ பாதை, மெட்ரோ வகை (மெட்ரோ, மெட்ரோலைட், மெட்ரோ நியோ), மதிப்பிடப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை, எத்தனை நிலையங்கள் & டிப்போவின் இருப்பிடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டுமான செலவுகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை மேற்கொள்ளும். இதை தயாரிக்கவே தற்போது ஏலம் பிவிடப்பட்டு உள்ளது.

CMRL 180 நாள் நிறைவு காலக்கெடுவுடன் ரிப்போட்டை தயாரிக்க வேண்டும் என்று கூறி ஆகஸ்ட் 2023 இல் ஆலோசகரை நியமிப்பதற்கான ஏலங்களை விடுத்தது.

கர்நாடகா எதிர்ப்பு: ஓசூரில் உருவாக்கப்பட உள்ள மெட்ரோவோடு பெங்களூர் மெட்ரோவை இணைப்பதற்கு கர்நாடக அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிக்கு கர்நாடகா முட்டுக்கட்டை போடும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூர் நகரைவிட வளர்ச்சியில் ஓசூர் தற்போது வேகம் எடுத்துள்ளது. விலை குறைந்த நிலம், பெங்களூரின் அதே கிளைமேட், அரசியல் ரீதியாக அதிக சிரத்தன்மை, நல்ல போக்குவரத்து, டிராபிக் இல்லை உட்பட்ட காரணங்கள் ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது.

முன்பெல்லாம் சென்னைக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்த முதலீடு கவனம் தற்போது மற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஓசூரும் வேகமாக வளர்கிறது.

விரும்பவில்லை: இதனால்தான் கர்நாடகா இதை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. தற்போது பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. இங்கே பணிகள் முடிந்த பின் ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு இதை விரும்பவில்லையாம். சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், ஓசூரில் வாழ்க்கைச் செலவு மிக மிக குறைவு. அதேபோல் தொழில்துறை நிலம் கிடைப்பது மிகவும் எளிது. இதை கருத்தில் கொண்டு பார்த்தால் பெங்களூருக்கு எதிராக இந்த விஷயம் திரும்பும். இதனால் மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ திட்டம் கர்நாடகாவிற்கு எதிராக மாறக்கூடும் என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

20.5 கிமீ மெட்ரோ பாதையில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியை CMRL ஏற்கனவே தொடங்கியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதில் முனைப்பு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓசூருக்குள் மட்டும் கூடுதல் கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ அமைக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

எப்படி போடப்படும்: இதில் கர்நாடகா அனுமதி இல்லாமல் போடுவதற்கு தமிழ்நாடு அரசு சில திட்டங்களை வைத்துள்ளதாம். அதன்படி இந்த ரிப்போர்ட் மூலம் கர்நாடகாவில் டிராபிக் பிரச்சனை எப்படி குறையும் என்பதை பற்றிய விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு அதன்மூலம் கர்நாடக அரசை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான முடிவை எடுத்துள்ளனர்.;

ஹரியானா - டெல்லி மெட்ரோவின் மூலம் இணைக்கப்பட்டதால் ஏற்பட்ட பயன்களை விளக்கி.. இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்ல தமிழ்நாடு திட்டமிட்டுள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+