ஆத்து பாலத்தில் .. 6வது நாளாக 'ரெஸ்ட்' எடுக்கும் பெருமாள்.. குவிகிறது கூட்டம்.. களை கட்டும் பூஜைகள்
பெருமாள் சிலையை கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது
Recommended Video
ஒசூர்: ஆத்துப்பாலத்துல ஆறாவது நாளா படுத்து கொண்டிருக்கும் பெருமாளுக்கு பூஜைகளும் வழிபாடுகளும் நிறைந்து வழிந்து வருகின்றன.
150 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலையை ராட்சச லாரியில் போன மாசம் ஏற்றினார்கள். பெங்களூரில் உள்ள ஒரு கோயிலுக்கு கொண்டு செல்லவே இப்படி ஏற்பாடு ஆனது.
ஆனால், எத்தனையோ இடைஞ்சல்கள், தடங்கல்கள் என்று தினம் ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. டயர் பஞ்சர், சாலை குறுகல், வீடு, கடைகள் இடிப்பு என நித்தம் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.

பக்தர்கள்
கடைசியாக சாமல்பள்ளம் எனும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை மறுத்ததால் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த 3ம் தேதி ஓசூர் நோக்கி மீண்டும் சிலை பயணம் தொடங்கியதும் பக்தர்கள் உற்சாகமானார்கள்.

சிறப்பு பூஜைகள்
ஆனால், மறுபடியும் தடை.. பேரணடப்பள்ளி அருகே பெருமாள் சிலை லாரி நிறுத்தப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றுப்பாலம் வழியாகத்தான் பெருமாளை கொண்டு செல்ல வேண்டும். இதனால் ஆற்றுப்பாலம் உறுதித்தன்மையுடன்தான் உள்ளதா? என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தற்காலிக பாலம்
அதனால் ஆற்றின் குறுக்கே புதிதாக மண்கொட்டி தற்காலிக பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனிடையே, நல்ல மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றுக்கும் தற்போது அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்காலிக மண்பாலம் அமைக்கும் பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

6-வது நாள்
பாலம் போட்டால்தான், பெருமாளை இங்கிருந்து நகர்த்த முடியும். இப்போதைக்கு அதை போடுவதிலும் சிக்கல் உள்ளதால், 6 வது நாளாக சிலை நிறுத்தப்பட்டுள்ளது. மண்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிந்தால் அடுத்த கட்ட பணிகள் துவங்கி சிலையானது ஓசூர் வழியாக பத்து கிலோமீட்டர் கடந்து தமிழக எல்லையை தாண்டி கர்நாடக மாநிலத்தில் நுழையும்.

தடைகள்
இன்னும் எத்தனை நாளைக்கு சிலை இங்கேயே நிறுத்தப்படுமோ தெரியவில்லை. ஆனால் பெருமாளை பார்த்து தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்! எல்லா தடைகளையும் உடைத்தெறிந்துவிட்டு, எப்படியும் பெருமாள் பெங்களூருக்குள் நுழைவார்!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications