பிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்
உழவர் சந்தையில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஓசூர்: பிறந்து ஒரு மாதமே ஆன அழகான பெண் குழந்தையை கடும் குளிரில் வீசிச் சென்ற கொடூரத்தில் ஒசூர் நகர மக்கள் உறைந்துள்ளனர்.
எப்பவுமே ஓசூர் உழவர் சந்தை மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகும். விவசாயிகள் விளைபொருட்களை விடிகாலையிலேயே இங்கு கொண்டு வர ஆரம்பித்து விடுவார்கள். அப்படித்தான் இன்று காலையும் சந்தைக்கு வந்தார்கள்.
அப்போது சந்தை அருகில் திடீரென குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனால் அவர்கள் சுற்றுமுற்றும் தேடி பார்த்தபோது, பிறந்த ஒருமாதமே ஆன பெண்குழந்தை இருப்பதை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

துணியால் சுற்றி இருந்தது
இப்போது தமிழகம் முழுவதும் குளிர் வாட்டி வந்தாலும், ஓசூரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஆனால் விடிகாலை நேரத்தில் இந்த பச்சிளம் குழந்தையை வெறும் துணியால் சுற்றி யாரோ வீசி எறிந்து சென்றதை அறிந்து விவசாயிகள் உட்பட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அனைவருமே கலங்கி விட்டார்கள்.

உடனடி சிகிச்சை
உடனடியாக இது குறித்து ஓசூர் நகர போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் மையத்தில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.

யார் என விசாரணை
ஓசூர் உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் குழந்தையை போட்டு சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அவலம் அதிகரிப்பு
எத்தனையோ பேருக்கு பிள்ளை பாக்கியம் இல்லாதபோது, இப்படி தமிழகத்தில் குழந்தைகளை ரோட்டோரம் வீசி செல்லும் அவலம் அதிகரித்தே வருவது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications