ஓசூருக்கு அடிக்குது யோகம்.. 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.. டாடாவின் மெகா பிளான்
ஓசூர்: ஓசூரில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையானது ரூபாய் 3,699 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் அங்கு 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது. தினமும் 2 லட்சம் ஐபோன்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
டாடா நிறுவனத்தின் அனைத்து குழுமங்களும் தமிழகத்தில் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில் தான் டாடா நிறுவனத்தின் டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை சிப்காட்டில் ரூ.9,000 கோடி ரூபாயில் ஜாக்குவார் லேண்டவார் கார்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவானது நடந்தது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு இதற்கான அடிக்கலை நட்டினார்.

அந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பேசுகையில், "ஓசூரில் உள்ள டாடா தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இந்த விரிவாக்க பணியினால் கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். ஓசூரில் உள்ள டாடா தொழிற்சாலையில் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 2 லட்சம் ஐபோன்களை உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலையை விரிவுப்படுத்த டாடா எலக்ட்ரானிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது.
ஓசூரில் உள்ள டாடா மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தினை விரிவாக்கம் செய்வதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரி டாடா எலக்ட்ரானிக்ஸ் குழுமம் விண்ணப்பித்துள்ளது. இந்த தொழிற்சாலை விரிவு செய்யப்படும் நிலையில், கூடுதலாக 80,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே 3,059 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனமானது செயல்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக ரூபாய் 3,699 கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலையானது விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
தற்போது 1.45 லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த ஆலையானது, விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த ஆலையின் பரப்பளவானது சுமார் 5 லட்சம் சதுரமீட்டராக இருக்கும். அதாவது விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த தொழிற்சாலையானது 174 ஏக்கராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தினமும் 92,000 ஐபோன் மொபைல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்டால் தினமும் 2 லட்சம் செல்போன்கள் உற்பத்தி செய்யப்படும்.












Click it and Unblock the Notifications