மாந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் பெண் சடலம்.. கொன்றது யார்.. சூளகிரி அருகே பரபரப்பு!
ஓசூர் அருகே இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
ஓசூர்: மாந்தோப்பில் இளம் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கும் சம்பவம் சூளகிரி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் பீர்ப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு அருகே ஒரு மாந்தோப்பு உள்ளது.

இங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சூளகிரி போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
இறந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும் என்கிறார்கள். ஆனால் யார் என்றே தெரியவில்லையாம். தலையில் பயங்கரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை மீட்ட சூளகிரி போலீசார் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது எங்கேனும் கொலை செய்துவிட்டு, இங்கு வந்து உடலை வீசி சென்றுள்ளார்களா? இந்த மாந்தோப்புக்கு இந்த பெண் ஏன் வர வேண்டும்? கொலைக்கான காரணம் என்ன? என்றெல்லாம் விசாரித்து வருகிறார்கள்.
பெண்ணின் சடலம் மாந்தோப்பில் கிடப்பதால், அந்த பகுதி மக்கள் பெருமளவில் கூடி இதை பார்த்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications