10 மாநிலங்களில் பக்கா ஸ்கெட்ச்.. ஆறே மாதத்தில் 21 கோடி சுருட்டிய காய்கறி வியாபாரி! மிரண்டுபோன போலீஸ்
டெல்லி: வெறும் 27 வயதான காய்கறி வியாபாரி ஒருவர் ஆறே மாதத்தில் 21 கோடியைச் சம்பாதித்துள்ளார். ஏதோ இவரது திறமைகளை வைத்துச் சம்பாதித்தார் என்று நினைத்துவிடாதீர்கள். இவர் செய்த காரியத்தைக் கேட்டால் உங்களுக்கே தலைச் சுற்றும்.
ஹரியானாவைச் சேர்ந்தவர் ரிஷப் சர்மா.. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இருப்பினும் கொரோனா பரவல் ஏற்பட்ட சமயத்தில் அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து பிழைப்பிற்கு என்ன செய்து எனத் தெரியாமல் வீட்டிலேயே முடங்கினார் ரிஷப் சர்மா. அப்போது தான் அவரது வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. அவரது பாதையும் மாற தொடங்கியது.
ரிஷப்: அடுத்து வெறும் ஆறு மாதங்களில், ரிஷப் 21 கோடி ரூபாயைச் சம்பாதித்தார். இத்தனை கோடி ரூபாயை அவர் ஒன்னும் நியாயமான முறையில் சம்பாதிக்கவில்லை. மக்களை ஏமாற்றியே அவர் சம்பாதித்துள்ளார். இந்தியாவின் 10 மாநிலங்களில் 37 மோசடி வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக அவர் இருக்கிறார். மேலும், 855 மோசடிகளுக்கு உதவி இருக்கிறார்.
இந்த மோசடிகள் குறித்து பலரும் புகார் கொடுத்த நிலையில், போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அவர் பயன்படுத்திய வங்கிக் கணக்குகள் மூலம் டிரேஸ் செய்த போலீசார், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி அவரை கைது செய்தனர். அப்போது விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது உள்நாடுகளில் மட்டுமின்றி சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற
பெரிய மோசடி: பிற நாடுகளில் உள்ள கிரிமினல் குழுக்களுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சீக்ரெட் கோட் மூலம் பணத்தை அவர்களுக்கும் அனுப்பியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசாரை மொத்தமாக அதிர வைத்த இந்த ரிஷப் யார்.. எப்படி அவர் இவ்வளவு பெரிய மோசடிகளை நடத்தினார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ரிஷப் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கொரோனா சமயத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்படவே பிஸ்னஸை முற்றிலுமாக இழுத்து மூடும் சூழல் ஏற்பட்டது. இதனால் குடும்பத்தைக் காப்பாற்ற அவர் ஒர்க் பர்ம் ஹோம் வேலைகளில் சேர முயன்றார். அப்போது தான் அவருக்கு ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்ட பழைய நண்பரின் தொடர்பு மீண்டும் கிடைத்துள்ளது.
தொழிலதிபர் கூட தப்பவில்லை: அந்த நண்பர் ரிஷப்பிற்கு பல டெலிபோன் நம்பர்களைக் கொடுத்துள்ளார். அந்த நம்பர்களுக்கு போன் செய்யும் ரிஷப் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதையைச் சொல்வாராம். அவர் பேசுவதைக் கேட்டால் யாராலும் அது பொய் என்றே கண்டுபிடிக்க முடியாது. இதன் காரணமாகவே பெரும் தொழிலதிபர்கள் கூட அவர்களிடம் ஏமாந்து போய் இருக்கிறார்கள். கடைசியாக இவரிடம் சிக்கிய டெஹ்ராடூனைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இவரிடம் ரூ.20 லட்சத்தை இழந்தார். இப்படி பெரிய பெரிய பிரபலங்களும் உள்ளனர்.
முதலில் இப்படி தொடர்பு கொண்டு பேசுவோரிடம் பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்திக் கொள்வார். இணையதளங்களில் தங்கள் ஹோட்டல் குறித்து பொய்யான பாசிட்டிவ் ரிவ்யூக்களை போட்டால் காசு தருகிறோம் என ஏமாற்றுவாராம். அவர்கள் அனைவரையும் வைத்து ஒரு போலி டெலிகிராம் குழுவையும் உருவாக்கினார். இல்லாத ஹோட்டலுக்கு போலி ரிவ்வீக்களை எழுத வைத்துள்ளார்.
நம்பிக்கை பெற மோசடி: அவர்களிடம் இருந்து நம்பிக்கையைப் பெற இவரே ஹோட்டலுக்கு வரப் போகும் விருந்தினர்களைப் போல இணையத்தில் கேள்வி எழுப்பி, அவர்களைப் பதில் சொல்லவும் வைத்துள்ளார். இப்படி எல்லாமே உண்மை போல இருந்ததால் பலரும் இவரை நம்பத் தொடங்கினர். மேலும், அவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 கொடுத்து அவர்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளார். மேலும், நீங்கள் முதலீடு செய்தால் கை மேல் காசு வரும் என்று சொல்லி அவர்களை நம்ப வைத்துள்ளார்.
அவர்கள் அதிக தொகையை முதலீடு செய்தவுடன் அப்படியே மாயமாகிவிடுவார். சம்மந்தப்பட்ட நபர்களைச் சத்தமே இல்லாமல் டெலிகிராம் குழுவில் இருந்து நீக்கிவிடுவாராம். மேலும், அவர்கள் போன் செய்தாலும் ஸ்விட்ச் ஆப் என்றே வருமாம். இப்படியே பலரிடம் சுமார் 21 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துள்ளார். இதையடுத்து இப்போது ரிஷப்பை கைது செய்துள்ள போலீசார், அவர் மீது மோசடி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
என்ன நடக்கிறது: இதில் மற்ற நாடுகளில் உள்ள கிரிமினல் கேங்குகளுக்கும் தொர்பு இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். சொல்லப்போனால் மாஸ்டர் பிளான் போடுவதே அந்த குழுக்கள் தான். அவர்களால் நேரடியாக வெளிநாட்டுக் கணக்குகளுக்குப் பணத்தை எடுக்க முடியாது என்பதால்.. ரிஷப்பை போன்ற நபர்களைப் பணி அமர்த்துகிறார்கள். அவர்கள் மூலம் வெளிநாடுகளுக்குப் பணத்தை எடுத்துச் செல்கிறார்கள்.
-
இலக்கியம் முதல் விண்வெளி வரை: டேராடூனில் களைகட்டும் டூன் இலக்கியத் திருவிழா 2026! -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
திருத்தணி தலைமை காவலரின் மனைவி பாக்கியலட்சுமிக்கு தலைவலி.. பிரபல மருத்துவமனையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சென்னை தலைமைச் செயலகத்தை அதிரவைத்த காவலர் கோதண்டபாணி.. என்ன நடந்தது? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை












Click it and Unblock the Notifications