குழாயை திறந்தால் "அது".. அலறி ஓடிய மக்கள்.. கடைசியில் பார்த்தால்.. திக்.. திக்.. திருப்பத்தூர்..!
திருப்பத்தூர் குடிநீர் குழாயில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பத்தூர்: காலங்காத்தாலே குடிநீர் குழாயை திறந்தால், ரத்தம் கொட்டி உள்ளது.. இதை பார்த்து திருப்பத்தூர் மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர்.
பொதுவாக நகர்ப்புறங்களில் குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்படும்.. சுத்தப்படுத்தப்படாத அல்லது பல வருடங்களாக பயன்படுத்தப்படாத குழாய்களில் இத்தகைய அடைப்புகள் ஏற்பட்டு, குடிநீர் அசுத்தமாக வாய்ப்புள்ளது.
அல்லது ராட்சச குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்ட பகுதிகளில், ரசாயன தொழிற்சாலைகள் இருந்தால், அந்த கழிவுநீரானது, குடிநீரில் கலந்து அசுத்தமாகிவிடும்..

சாயப்பட்டறை
மேலும் பல மாவட்டங்களில் சாயப்பட்டறைகளில் இருந்தும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்தும் கழிவுகள் கலந்துவிடும்.. இதெல்லாம் தெரியாமல் குடித்துவிட்ட எத்தனையோ அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகமும் நம் தமிழகத்திலேயே நடந்துள்ளது.. இந்நிலையில், திருப்பத்தூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அது இதுவரை எங்குமே நடக்காத சம்பவமாக உள்ளது.

திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சி 25வது வார்டுடில் இந்த அதிர்ச்சி நடந்துள்ளது.. இங்கு சின்ன மதர் பகுதியில் சந்தமியான் தெரு, சின்னக்கடை தெரு, சி.கே.சி தெரு உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்... இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், காலையில் குழாயை திறந்தபோது, ரத்தம் கொட்டி உள்ளது.. தண்ணீருக்காக நகராட்சி குடிநீர் பைப் திறந்தபோதுதான், ரத்தம் கலந்து சிவந்த நிறத்தில் தண்ணீர் வந்துள்ளது.

ரத்தம்
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், முதலில் அது ஏதோ சாயம் என்றுதான் நினைத்துள்ளனர்.. பிறகுதான் ரத்த வாடையும் சேர்ந்து வந்துள்ளதை பார்த்து மிரண்டு போயுள்ளனர்.. அதனால், உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்... அப்போது அங்குள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருந்ததை பார்த்தனர்.. உடனடியாக அதை சுத்தம் செய்ய முயன்றபோதுதான் தெரிந்தது, அவை எல்லாம் நிஜமாகவே ரத்தமாம்.

மாட்டிறைச்சி
ஆனால், மாட்டின் ரத்தம்.. அந்த பகுதியில் உள்ள மாட்டிறைச்சி கடைகளில் இருந்து வெளியேறியுள்ளது.. மாட்டிறைச்சி கழிவுகள் ஏராளமாக தேங்கி, அந்த குடிநீர் பைப் லைனில் சேர்ந்துவிட்டது.. அதில்தான் கழிவுகளுடன் ரத்தமும் கலந்து வந்திருப்பது தெரியவந்தது.. இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மக்கள் பாதாள சாக்கடை அடைப்பை அங்கு தற்காலிகமாக சீரமைத்துள்ளனராம்..!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications