ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேய்.. "ஹைடெக்" விபச்சாரமாம்.. 14,000+ இளம் பெண்களும் "ஒருவரிடத்திலே".. வெலவெலத்து போன போலீஸ்..!!

14000 பெண்கள் ஹைடெக் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: விபச்சாரத்தில் ஒரே இடத்தில், 14000 பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களாம்.. இப்படி ஒரு காரியம் நடந்துள்ளது நம்ம இந்தியாவில்தான்..!!

தெலுங்கானாவின் பேகம் பேட்டையை சேர்ந்தவர் முகமது சல்மான்கான்.. சமீர் என்று இவருக்கு இன்னொரு பெயர் உண்டு.. இவர் முதன்முதலில் ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலைக்கு சேர்ந்துள்ளார்..

அப்போதுதான், விபச்சார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அதே ஹோட்டலில் தங்குவதை கவனித்து வந்துள்ளார்.. அந்த பெண் சுலபமான வழியில் பணத்தை சம்பாதிப்பதையும் கவனித்துள்ளார்..

நாடாளுமன்றம்: நாங்க ரெடி...முதலில் நீங்க விவாதத்துக்கு ரெடியா?பிரதமர் மோடிக்கு முரசொலி நறுக் கேள்வி நாடாளுமன்றம்: நாங்க ரெடி...முதலில் நீங்க விவாதத்துக்கு ரெடியா?பிரதமர் மோடிக்கு முரசொலி நறுக் கேள்வி

விபச்சாரம்

விபச்சாரம்


இதை பார்த்ததும் சமீருக்கும் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது.. ஏற்கனவே போதைப்பொருள் பழக்கம் உள்ளவர் சமீர்.. இதனால் தினமும் அவருக்கு போதை பொருளும் தேவையாக இருந்தது.. இதற்காகவே, போதைப்பொருள் விற்பனை செய்யும் ஆர்னவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.. இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து, சோமாஜி கூடா பகுதியை மையமாக கொண்டு, விபச்சார விடுதியை நடத்து துவங்கி உள்ளனர். பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கான பிராஞ்ச்சை ஆரம்பித்தனர்.

வாட்ஸ்அப் க்ரூப்

வாட்ஸ்அப் க்ரூப்

இதற்காகவே, ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பையும் உருவாக்கினார்கள்.. அதில், மொத்தம் 17 பேரை முக்கிய அமைப்பாளர்களாக நியமித்தனர்.. இந்த 17 பேருமே வேறு வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்.. அந்தந்த மாநிலத்தில், தனித்தனி 'வாட்ஸ் அப்' க்ரூப்கள் இந்த 17 பேர் தலைமையில் நடக்கும்.. ஆனால், 17 பேரின் கன்ட்ரோலும் அமீரிடம் இருக்கும்.. அந்த 17 பேரின் வாட்ஸ்அப் குரூப்களில் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்... இவர்கள் மூலம் மொத்தம் 14 ஆயிரத்து 190 பெண்கள் இணைந்து விபச்சார விடுதிகளை நடத்தியுள்ளனர்...

ஹை-டெக்

ஹை-டெக்

இதனால் நாடு முழுவதும் இவர்களது ஹைடெக் விபச்சார தொழில் கொடிகட்டி பறந்துள்ளது.. 14 ஆயிரத்து 190 பெண்களில் பெரும்பாலும், அப்பாவி பெண்கள்.. வேலை வாங்கி தருவதாக சொல்லி, சினிமாவில் சான்ஸ் தருவதாக சொல்லி, அவர்களை நம்ப வைத்துள்ளனர்.. வேலைக்கு அப்ளிகேஷன் அனுப்ப வேண்டும் என்பதற்காக போட்டோ எடுத்து, அப்பெண்களை அனுப்ப சொல்லி உள்ளனர்.. அந்த பெண்களும் போட்டோ எடுத்து, சம்பந்தப்பட்ட 'வாட்ஸ்அப்' குரூப்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. ஆனால், அந்த குரூப்களில் ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள், தங்களுக்கு தேவையான பெண்களை தேர்ந்தெடுத்து கால் சென்டர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

கால் சென்ட்டர்ஸ்

கால் சென்ட்டர்ஸ்

கால் சென்டர் ஊழியர்கள், குறிப்பிட்ட லாட்ஜ்களில் விபசார அழகி இருப்பார் என்றும், அவருக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லி ஒரு தொகையை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்வார்கள். அந்த பணத்தில் 30 சதவீதம் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கும், 35 சதவீதம் அந்தப்பெண்களின் படங்களை விளம்பரம் செய்பவர்களுக்கும் கால் சென்டர் பிரதிநிதிகளுக்கும் கொடுப்பார்கள்... எஞ்சிய 35 சதவீத பணத்தை நிர்வாகிகள் பங்கிட்டு கொள்வார்கள்..

ஹைடெக்

ஹைடெக்


விபச்சாரத்திற்கு பெண்களை கேட்கும் ஆண்களுடன் பேசுவதற்காக நிர்வாகிகள் ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் கால் சென்டர்களை ஏற்பாடு செய்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, மராட்டியம், டெல்லி, கொல்கத்தா, அசாம் மாநில பெண்களோடு தாய்லாந்து, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், ரஷிய நாட்டு பெண்களையும் வைத்து கூட இவர்கள் விபச்சாரம் நடத்தியுள்ளனர்.

ஹைடெக் விபச்சாரம்

ஹைடெக் விபச்சாரம்

வெளிநாட்டு பெண்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகள் ஆதார் கார்டுகளை தயாரித்து இவர்களை இந்தியா முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு அழைத்து செல்கிறார்களாம். விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த அதிர்ச்சி தகவல்கள் எல்லாமே வெளிவந்துள்ளது.. இதுகுறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.. இப்போதைக்கு 18 பேரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளதாகவும், மற்றவர்களை விரைவில் கைது செய்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

English summary
14000+ women in online prostitution in Hyderabad and what happened actually: Prostitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X