"பர்த் டே" கொண்டாட சென்ற 16 வயது சிறுமி.. கூட்டு பலாத்காரம்.. ஜூஸில் மருந்து கலந்து.. நடந்த கொடுமை

சிறுமி சத்தம்போடுவது வெளியில் கேட்கக்கூடாது என்பதற்காக பாட்டு சத்தத்தை இளைஞர்கள் அதிகமாக வைத்திருக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனது தோழியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க சென்ற 16 வயது சிறுமி 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து 5 இளைஞர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அன்றாட செலவுகளுக்கு கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரேயொரு மகள் மட்டும் இருக்கிறார். குடும்ப சூழல் காரணமாக பள்ளி செல்லாமல் இச்சிறுமி கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தின் சத்ரிநாகா பகுதியில் வசிகும் இந்த சிறுமியின் தோழி ஒருவர் தன்னுடைய பிறந்த நாள் விழாவில் பங்கேற அழைப்பு விடுத்திருக்கிறார்.

அழைப்பின் பேரில் கடந்த 4ம் தேதி இரவு இச்சிறுமியும் தனது தோழியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து தோழியின் ஆண் நண்பர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். போகும்போதே கேக், சாக்லேட் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். தோழியின் ஆண் நண்பர் வீட்டில் ஏற்கெனவே 5 இளைஞர்கள் இருந்திருக்கின்றனர். இதனையடுத்து இரவு 11.30 மணியளவில் கேக் வெட்டப்பட்டிருக்கிறது. கேக் வெட்டிய பின்னர் தோழியும் அவரின் ஆண் நண்பரும் மட்டும் ஒரு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டுள்ளனர்.

பலாத்காரம்

பலாத்காரம்

வெளியில் இருந்த 5 இளைஞர்களுக்கு மத்தியில் இச்சிறுமி மட்டும் இருந்திருக்கிறார். இதனையடுத்து அங்கிருந்து வெளியே முயற்சிக்கையில் இளைஞர்கள் மயக்க மருந்து கலந்த ஜூஸை சிறுமிக்கு கொடுத்திருக்கிறார்கள். இது சிறுமிக்கு தெரியவில்லை. ஜூஸை குடித்த சில நிமிடங்களில் சிறுமி கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்திருக்கிறார். பின்னர் இளைஞர்கள் சிறுமியிடம் அத்துமீறியுள்ளனர். சிறுமியால் இதனை தடுக்க தெரிவிக்க முடியவில்லை. எனவே சத்தம் போட்டுள்ளார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் சிக்கிக்கொள்வோம் என பயந்த இளைஞர்கள் பாட்டு சத்தத்தை கூட்டி வைத்திருக்கின்றனர்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

பின்னர் ஒரு வழியாக அதிகாலை 5 மணியளவில் இளைஞர்களிடமிருந்து தப்பிய சிறுமி வீடு வந்து சேர்ந்திருக்கிறார். பின்னர் தனது தாயிடம் நடந்த கொடுமையை விவரிக்க, தாய் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரின் 5 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் திடீரென தலைமறைவாகிவிட்டனர். எனவே முதலில் சிறுமியின் தோழியையும், தோழியின் காதலனையும் பிடித்து விசாரித்தனர். இதனையடுத்து மீதமிருந்த 5 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது

கைது

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை முடிந்துள்ள நிலையில் அவர் அரசு பாதுகாப்பில் வைகப்பட்டிருக்கிறார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "இது ஒரு மோசடி குற்றச்சாட்டு. ஏனெினல் சிறுமியை அவரது தோழி வேண்டு மென்றே இந்த பிறந்தநாள் விழாவுக்கு அழைத்து வந்திருக்கிறார். இந்த விழாவில் 5 இளைஞர்கள் வருவது ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே இது அனைத்தும் திட்டமிட்ட செயல். இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். இதில் பாதிக்கப்பட்ட பெண் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

இதில் தோழி மற்றும் அவருடைய காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 4 பேர் சிறுமியின் சமூகத்தை சேர்ந்தவர்களாவார்கள். இதுபோன்ற குற்றங்களை கட்டுப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம்" என்று கூறியுள்ளார். அதேபோல குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+