ஆந்திராவிலும் பொள்ளாச்சி பாணி கொடூரம்.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 16 வயது சிறுமி, 5 நாட்களாக, அறையில் அடைத்து வைக்க்ப்பட்டு 6 பேர் கொண்ட கும்பலால் மாறி மாறி, பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், ஓங்கோல் நகரில் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலை சேர்ந்தவர்கள். அனைவரும், கைது செய்யப்பட்டுள்ளனர், என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை எழுப்பியுள்ளதால், கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார், உள்துறை அமைச்சர் எம்.சுச்சரிதா.

பலாத்காரம்
பலாத்கார குற்றவாளிகளில் ஒருவரை, பாதிக்கப்பட்ட பெண், ஜூன் 17ம் தேதி, ஓங்கோல், பேருந்து நிலையத்தில் சந்தித்துள்ளாார். அப்போது முதல் இருவரும் நண்பர்களாகிவிட்டனர். அந்த ஆண் அழைத்ததை நம்பி, அவருடன் அந்த பெண் ஒரு வீட்டுக்கு சென்றபோது, அங்கே மேலும் 5 பேரும் இருந்துள்ளனர். ஆக மொத்தம் 6 பேரும், இந்த பெண்ணை, 5 நாட்களாக, அறையில் அடைத்து வைத்து, பலாத்காரம் செய்துள்ளனர்.

தப்பினார்
சிறுமி எப்படியோ, தப்பித்து சனிக்கிழமை மாலை பேருந்து நிலையத்தை அடைந்தபோது, ரவுண்ட்ஸில் இருந்த காவலரும், உதவி சப்-இன்ஸ்பெக்டரும் அவரைக் கண்டுபிடித்து மீட்டனர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

தேடுதல் வேட்டை
சம்பவம் குறித்து அறிந்ததும், சிறுமி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதையடுத்து மாநிலம் முழுக்க போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். குற்றவாளிகளில் ஒருவன், நெல்லூர் மாவட்டம் பித்ராகுன்டாவில் ரயில் ஏற முயன்றபோது பிடிக்கப்பட்டான்.

பாதுகாப்பு
இந்த கொடூர சம்பவத்தை கண்டித்துள்ள ஆந்திர டிஜிபி, கவுதம் சவாங், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு காவல்துறை உயரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றார். இதுபோன்ற குற்றவாளிகளை கடும் சட்டப்பிரிவுகளின்கீழ் கொண்டு வந்து உச்சபட்ச தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாணி
பொள்ளாச்சியில், பேஸ்புக்கில் பழகிய ஆண்களை நம்பி தனியாக சென்ற பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். வீடியோக்களாக அந்த கொடுமைகள் எடுக்கப்பட்டு மிரட்டி, மிரட்டியே பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஆந்திராவிலும் அதேபோல நட்பு, காதல் என்ற பெயர்களில் கூட்டு பலாத்காரத்திற்கு சிறுமி உள்ளாக்கப்பட்டுள்ளார்.
-
ஒட்டன்சத்திரம் தளையூத்து அருவிக்கு வந்த 11 நண்பர்கள்! நீரில் மூழ்கி 4 பேர் பலியான சோகம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications