Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவிற்கு தரமான செக் மேட்.. அப்போ சிபி ராதாகிருஷ்ணன்? இந்தியா கூட்டணி அமைத்த சக்ர வியூகம்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான "இந்தியா" கூட்டணி பொது வேட்பாளராக பி. சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்தியா கூட்டணியின் இந்த அறிவிப்பு ஆந்திர அரசியலை பெரிய அளவில் குலுக்கியதோடு இல்லாமல் பாஜகவையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசித் தேதியாகும். தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களுக்காக ஜூலை 21 அன்று பதவி விலகியதால் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

CP Radhakrishnan 2025 Vice President election

பாஜக குடியரசுத் துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவு, பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான நாடாளுமன்ற வாரியத்தால் எடுக்கப்பட்டது. பாஜகவின் இந்த மூவ் தமிழக அரசியலை தாண்டி கொங்கு மண்டலத்தை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இவர் கவுண்டர் ஜாதி பின்னணியை கொண்டவர். அங்கே கவுண்டர் பிரிவு மக்கள் இடையே, மற்ற சில கிளை சாதிகள், பட்டங்கள் இடையே நல்ல பெயர் பெற்றவர். இதன் காரணமாக இவரை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் திமுகவிற்கு ஏற்படலாம். கொங்கில் வீக்காக இருக்கும் திமுக இவரை எதிர்ப்பது சிக்கலாக மாறலாம்.

திமுக பாஜகவில் இல்லாத, சிறுபான்மையினர் பின்னணியை கொண்ட ஏபிஜே அப்துல்கலாமையே குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்கவில்லை என்பது அரசியல் வரலாறு. இதனால் என்டிஏ வேட்பாளர் யாராக இருந்தாலும் திமிக்க அவர்களை ஆதரிக்காது என்பதே அரசியல் வரலாறு. இப்போதும் அதே முடிவை திமுக எடுக்கலாம்.

ஆனால் இந்த முறை கவுண்டர் ஜாதி அரசியலை வைத்து திமுகவிற்கு பாஜக செக் வைத்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் கூட இல்லாத நிலையில் திமுகவிற்கு பாஜக புதிய நெருக்கடியை இதன் மூலம் கொடுத்துள்ளது. கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதி (எதிர்காலத்தில் ஜனாதிபதி வாய்ப்பும் வரலாம்) ஆவதை திமுக தடுக்க பார்க்கிறது என்ற கருத்தை பாஜக முன்னெடுக்க வாய்ப்புகள் உள்ளன. இது கொங்கு மண்டலத்தில் வலுவான பிரச்சாரமாகவும் அமையலாம்.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் "இந்தியா" கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை அறிவிக்க ஆலோசனை நடத்தியது. முதலில் திருச்சி சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அது கடைசி நேரத்தில் மாறியது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் கார்கே வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான "இந்தியா" கூட்டணியின் பொது வேட்பாளராக மாஜி சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுதர்சன் ரெட்டி - குலுங்கும் ஆந்திர அரசியல்

ராதாகிருஷ்ணனை போலவே சுதர்சன் ரெட்டியும் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். சுதர்சன் ரெட்டி 1946ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி பிறந்தவர். இப்போது தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பிறந்த இவர், தனது சட்டப் படிப்பை ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முடித்தார். காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கூட்டணியின் இந்த நடவடிக்கை, ஒரு சிறப்பான ராஜதந்திர நகர்வாகக் கருதப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கு (TDP) இது ஒரு சவாலாக இருக்கும். தெலுங்கர் ஒருவரை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்படும். அவர் தற்போது பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறார். அவரின் ஆதரவின் பெயரிலேயே பாஜக ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

அதேபோல் ரெட்டி சமூகத்தினர் பொதுவாக தெலுங்கு தேசம் கட்சியின் வாக்காளர்கள் அல்லர். எனவே, சுதர்சன் ரெட்டிக்கு தெலுங்கு தேசம் கட்சி வாக்களிக்கவில்லை என்றாலும், கட்சிக்கு பெரிய அளவில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்த நகர்வு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ். ஜெகனைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான "செக்மேட்" நகர்வாக அமைந்துள்ளது. இது ஜெகனின் அரசியல் திட்டங்களுக்கு ஒரு பெரிய தடையாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் முழுக்க முழுக்க ரெட்டியை நம்பியே இருக்கிறார். இதனால் இந்திய கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய பெரிய கட்டாயம் ஜெகனுக்கு ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+