21 வயசு பொண்ணு.. மாந்தோப்பில் வைத்து.. 6 பேர்.. அத்தனை பேரும் சிறார்கள்.. கொடுமை
இளம்பெண்ணை 6 சிறுவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்
ஹைதராபாத்: கண்ட கருமத்தையும் பார்த்துப் பார்த்து கெட்டுப் போன 6 சிறார்கள், 21 வயது பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த செயல் தெலுங்கானாவை அதிர வைத்துள்ளது.
கலிகாலம் என்றுசொல்வார்கள் பெரியவர்கள். கண்டதும் இதில் நடக்கும் என்றும் சொல்வார்கள். எல்லாம் உண்மைதான் போல. நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால் இன்னும் என்னெல்லாம் நடக்குமோ என்ற அயர்ச்சிதான் பிறக்கிறது.
தெலுங்கானா பக்கம் 6 சிறார்கள் சேர்ந்து 21 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர வைத்துள்ளது இத்தனை கருமத்திற்கும் காரணம் ஆபாசப் படங்கள்தான். அதைப் பார்த்துப் பார்த்து மனசெல்லாம் கெட்டுப் போய் இப்படி நாசம் செய்துள்ளனர் இந்த சிறுவர்கள்.

சமையல் செய்பவர்
தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஊர் அமங்கல் கிராமம். இந்த கிராமத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. அவர்களால் நாசம் செய்யப்பட்ட 21 வயதான பெண் ஹைதராபாத்தில் உள்ள கேட்டரிங் நிறுவனத்தில் சமையல் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் சத்யநாராயணபுரம்.

மகபூபாபாத்
வெள்ளிக்கிழமையன்று இவர் ரயில் மூலம் ஹைதராபாத்திலிருந்து வேலை முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ராத்திரியில் அவர் மகபூபாபாத் வந்து சேர்ந்தார். பின்னர் தனது வீட்டுக்குப் போன் செய்துள்ளார். ஆனால் லைன் போகவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துள்ளார் அப்பெண். இதையடுத்து மகபூபாபாத் மாவட்டம் பலராம் தண்டா என்ற ஊரில் வசிக்கும் தனது நண்பர் சந்து என்பவரை அழைத்துள்ளார்.

மாந்தோப்பு
இதையடுத்து சந்து விரைந்து வந்தார். அப்பெண்ணை அழைத்துக் கொண்டு கிளம்பினார். ஆனால் அவரது கிராமத்துக்குப் போகாமல் அமங்கல் கிராமத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து ஒரு மாந்தோப்புக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்ற இருவரும் அங்கு வைத்து பலாத்காரம் செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்தார் அப்பெண்.

மாறி.. மாறி...
அந்த இரண்டு அயோக்கியர்களும் அத்துடன் நிற்கவில்லை. போன் செய்து தங்களது நண்பர்களையும் அழைத்தனர். மேலும் நான்கு பேர் அங்கு வந்து அவர்களும் இப்பெண்ணை சீரழித்துள்ளனர். இதனால் அந்தப் பெண் படுகாயமடைந்தார். மாறி மாறி சீரழித்த பின்னர் ஆறு பேரும் ஓடி விட்டனர். அப்பெண் தட்டுத் தடுமாறி எழுந்து ஊர் நாட்டாமையான ஹரிலால் நாயக் என்பவரை அணுகி தகவல் சொன்னார். அவர் போலீஸுக்கு தகவல் கூறினார்.

அனைவரும் கைது
இதையடுத்து விரைந்து வந்தனர் போலீஸார். குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள ஆறு பேரும் சிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. அனைவரையும் போலீஸார் தற்போது கைது செய்து விட்டனராம். அனைவருமே செல்போனில் ஆபாசப் படம் அதிகமாக பார்ப்பார்களாம். அதைப் பார்த்துப் பார்த்து மனசு கெட்டுப் போய் அசிங்கமாக மாறியுள்ளனர். இதன் விளைவாக இப்போது தங்களது வயதுக்கு மீறிய பெண்ணை சீரழித்து சிக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications