ஆந்திராவில் மாப்பிள்ளைக்கு மறக்க முடியாத விருந்து வைத்த மாமியார்.. 470 ஐட்டங்களா? இதுதான் சங்கராந்தி
ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்தில், புதுமண தம்பதிக்கு, ஏனாமில் உள்ள தாய் வீட்டில், சங்கராந்தி விருந்து வைக்கப்பட்டது. இந்த கறிவிருந்துதான் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.. இது பலருக்கும் திகைப்பை தந்துவருகிறது.
தீபாவளிக்கு தலை தீபாவளியை போலவே, பொங்கல் பண்டிகைகளின்போது புதிதாய் திருமணமான தம்பதியர்களும், "தலை பொங்கல்" கொண்டாடுவது வழக்கமாகும்.. இதுபோன்ற பண்டிகைகளின்போது, தம்பதியருக்கு பல்வேறு வகையான உணவுகளில் விருந்து வைத்து, நகைகளும் பரிசாக வழங்கப்படும்.

மெகா விருந்து: இதுபோன்ற விருந்து கலாச்சாரத்தில், மருமகள், மருமகனை ஆச்சரியப்படுத்துவதில் ஆந்திரா, தெலுங்கானா மக்களே முதலிடத்தில் உள்ளார்கள். மாப்பிள்ளை, மருமகளுக்கு, மாமியார்கள் சர்ப்ரைஸ்களை தந்து அசத்துவார்களாம்.
நம்ம ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை போல, ஆந்திராவில் உழவை கொண்டாட சங்கராந்தி என்ற தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2 பண்டிகைகளும் ஒரேநாளில் வருவதால், மணமக்களுக்கு இந்த விருந்து வைக்கப்படுகிறது.. மாமியார் வைக்கும் இந்த மெகா விருந்துகள், இணையத்திலும் அவ்வப்போது வைரலாகிவிடும்.
சங்கராந்தி: அந்தவகையில் இன்றைய தினம், ஆந்திர மாநிலத்தில், சங்கராந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டும், புதிதாக திருமணம் செய்த மணமக்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தும், கவுரவித்தும் வருகிறார்கள்.
இதில் ஒரு ஆச்சரிய சம்பவமும் ஆந்திராவை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் நடந்துள்ளது.. இங்குள்ள வர்த்தக சங்க செயல் தலைவரான சத்யபாஸ்கர் வெங்டேஸ்வர் மகள் ஹரின்யாவுக்கும், விஜயவாடாவை சேர்ந்த ஷாகேத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த புதுமண தம்பதிக்கு, ஏனாமில் உள்ள தாய் வீட்டில், சங்கராந்தி விருந்து வைக்கப்பட்டது.
470 வகைகள்: அப்போது, தம்பதிக்கு 470 வகை உணவுகளுடன் விருந்து வைத்து அசத்தினார்கள்.. இந்த விருந்தில் மணமக்களுக்கு பிடித்த உணவுகள், இனிப்புகள், உள்ளூர் வகை உணவு தொடங்கி பல வெளிமாநில உணவுகளும் இடம்பெற்றிருந்தன..
நேற்றைய தினமும், ஹைதராபாத்தில் மெகா விருந்து நடைபெற்றது.. சரூர் நகர் அடுத்த சாரதா நகரை சேர்ந்த கல்பனா என்பவர் தன்னுடைய புது மருமகனுக்கு மட்டன், சிக்கன், மீன் என கிட்டத்தட்ட 130 வகையான உணவுகளை சமைத்து விருந்து வைத்தார்.
மணக்க மணக்க ஐட்டங்கள்: இத்தனை அயிட்டங்களையும் பார்த்து புதுமாப்பிள்ளைகள் அப்படியே திக்குமுக்காடி போய்விட்டனர்.. எல்லா ஐட்டத்தையும் சாப்பிட்டார்களா? என்று தெரியவில்லை. ஆனால், மாமியார்கள் சமைத்து வைத்துள்ள, சமையல் ஐட்டங்களை பார்க்கவே, அந்த பகுதி மக்கள் திரண்டு வந்துவிட்டார்களாம்.. சங்கராந்திக்கு மாமியார்கள் வைக்கும் இந்த பிரம்மாண்டமான விருந்துகள்தான் இணையத்தில் வாசனையுடன் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications