விபசாரம் செய்ய மறுத்த காதலி... லிவ் இன் ரிலேஷன்ஷிப் பார்ட்டனர் கொடுத்த பயங்கர தண்டனை.. உயிரே போச்சு
ஹைதராபாத்: கணவரை பிரிந்த 22 வயது இளம்பெண், இளைஞர் ஒருவரும் திருமணம் செய்யாமல் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' உறவில் இருந்தார். இந்த வேளையில் இளம்பெண்ணை விபசாரம் செய்யும்படி ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' பார்ட்னர் வற்புறுத்தினால் அதற்கு அவர் மறுத்த நிலையில் கத்தியை எடுத்து மார்பில் குத்தி கொன்றார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' காதலி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராஜோலு மண்டலுக்கு உட்பட்டு பி. சவரம் கிராமம் உள்ளது. இங்குள்ள சித்தார்த் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஒலட்டி புஷ்பா என்ற 22 வயது இளம்பெண், ஷேக் ஷம்மா என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

ஒலட்டி புஷ்பாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் தனது கணவரை விட்டு பிரிந்தார். இதையடுத்து கடந்த 6 மாதங்களாக ஒலட்டி புஷ்பாவும், ஷேக் ஷம்மாவும் வாடகை வீட்டில் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்'பில் இருந்து வந்தனர். இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
இந்நிலையில் தான் சமீபத்தில் ஷேக் ஷம்மாவுக்கு தனது ஜோடி புஷ்பா மீது சந்தேகம் வந்தது. புஷ்பா தன்னுடன் மட்டுமின்றி இன்னும் சிலருடன் கள்ளக்காதலில் இருப்பதாக ஷேக் ஷம்மா நினைத்தார். இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். அதன்பிறகு சமாதானம் ஆகி ஜாலியாக இருந்துள்ளனர்.
ஷேக் ஷம்மாவுக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் மதுபோதையில் அடிக்கடி புஷ்பாவிடம் சண்டை செய்துள்ளார். மேலும் விபசாரத்தில் ஈடுபடும்படி அவர் புஷ்பாவை கட்டாயப்படுத்தி உள்ளார். அதாவது விபசாரம் செய்தால் அதிகளவில் பணம் கிடைக்கும். அதனை வைத்து ஜாலியாக ஊர் சுற்றலாம். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று புஷ்பாவிடம், ஷேக் ஷம்மா தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு புஷ்பா அதிர்ச்சியடைந்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னால் விபசாரம் செய்ய முடியாது என்று கூறி மறுத்துள்ளார். நேற்று இரவு 10 மணியளவிலும் விபசாரம் செய்யும்படி புஷ்பாவிடம், ஷேக் ஷம்மா கூறியுள்ளார். அதற்கு புஷ்பா மறுத்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஷேக் ஷம்மா கத்தியை எடுத்து அவரின் மார்பு பகுதியில் குத்தி உள்ளார். அதேபால் அவரது காலிலும் கத்தியால் குத்தி உள்ளார்.
இதில் புஷ்பாவின் உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இதில் புஷ்பா இறந்தார். இதையடுத்து ஷேக் ஷம்மா அங்கிருந்து ஓடிவிட்டார். இதுதொடர்பாக ரஜோலு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஷேக் ஷம்மாவை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications