25 பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அரசு பேருந்து.. போராடி மீட்ட மீட்பு குழுவினர்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ராஜன்னஸ்ரீசிலா மாவட்டத்தில் 25 பயணிகளுடன் சென்ற பேருந்து மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பேருந்தில் இருந்த 25 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் கம்பிராவ்பேட்டை- லிங்கன்னபேட்டை இடையே தெலுங்கானா மாநில அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

அரசு பேருந்து
நேற்று மாலை வழக்கம்போல் பேருந்து சென்று கொண்டிருந்தது. மண்னேறு ஆற்றின் பாலம் மீது அந்த பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் பாலத்தின் மேலேயும் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. டிரைவரால் அந்த பேருந்தை மேற்கொண்டு இயக்க முடியவில்லை.

வெள்ளத்தில் சிக்கியது
இதனால் உள்ளே இருந்த பயணிகள், டிரைவர் மற்றும் கண்டக்டர் செய்வதறியாது திகைத்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண பாஸ்கர் தலைமையிலான மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பத்திரமாக மீட்பு
இதனை தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த 25 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் தீயணையப்பு படையினர், மீப்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன்பின்னர் ஜேசிபி எந்திரம் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தை மீட்க முயன்றனர். ஆனால் பல மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது. அந்த பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

மக்கள் கோரிக்கை
வெள்ளத்தில் சிக்கி பேருந்து அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மண்னேறு பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மழைகாலம் வரும்போதெல்லாம் இந்த பாலத்தில் கடுமையாக வெள்ளபெருக்கு ஏற்படுகிறது. இதனால் கடும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு சிரமம் ஏற்படுவதாகவும், இந்த பாலத்தின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications