கழிப்பறை ஆசிட் குடிக்க வைத்து மனைவி கொலை!“ஐ நோ” சைக்கோ கணவன் வெறிச்செயல்! கருவோடு சிதைந்த குடும்பம்
ஹைதராபாத் : தெலங்கானா மாநிலத்தில் கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை கர்ப்பிணி மனைவியை பலவந்தமாக குடிக்க செய்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கொடூர மனம் கொண்ட கணவனை தெலங்கானா போலீஸார் தேடி வருகின்றனர்.
நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள வர்னி மண்டலத்தில் உள்ள ராஜ்பேட் தாண்டாவில் கர்ப்பிணிப் பெண் அவரது கணவனால் கொல்லப்பட்ட சம்பவம் தான் தற்போது தெலுங்கானா மாநிலத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட தருண் என்பவர் கர்ப்பிணியாக இருந்த மனைவி கல்யாணியை கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடிக்கும்படி வற்புறுத்தியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானாவில் அதிர்ச்சி
இதுகுறித்து நிஜாமாபாத் மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, குற்றம் சாட்டப்பட்ட தருண், ஒரு தொழிலாளி, பாதிக்கப்பட்ட கல்யாணியை சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும், அப்போது இருந்தே தாழ்வு மனப்பான்மையால் சந்தேகத்தில் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் தினமும் சண்டை நடந்துள்ளது.

மனைவி மீது சந்தேகம்
இந்நிலையில் கடந்த மூன்று மாதத்துக்கு முன் மனைவியான கல்யாணி கர்ப்பமானதால் தருண், தனது தோற்றம் சரியில்லை என கூறி துன்புறுத்தத் தொடங்கினார். மேலும் அவர் தனது குடும்பத்திடம் இருந்து அதிக வரதட்சணை பெற்று தருமாறு அவரை துன்புறுத்தத் தொடங்கினார் என்று வர்னி போலீசார் கூறியுள்ளனர்.

ஆசிட் குடிக்க வைத்து கொலை
இதற்கிடையே கடந்த செவ்வாய்கிழமை கல்யாணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கழிவறை சுத்தம் செய்யும் வகையில் அவரை ஆசிட்டை குடிக்கும் படி கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலால் கல்யாணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி கல்யாணி புதன்கிழமை உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை
தருண் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்தி கொன்றதாகவும் தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கல்யாணியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் இருவர் மீது ஐபிசி பிரிவு 302, 304-பி மற்றும் 498-ஏ ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில், அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications