உல்லாசத்திற்கு தடை போட்டதால் சுஜாதாவிற்கு கோபம்.. காதலனின் மனைவி, குழந்தை உயிருடன் இல்லை
ஹைதராபாத்: திருமணத்தை மீறிய உறவு என்பது ஒரு விஷச்செடி போல் படர்ந்து மொத்த குடும்பத்தையும் அழிக்கும் என்பதற்கு பல உதாரணங்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். தெலுங்கானா மாநிலத்தில் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்காதலனின் மனைவி, குழந்தையை பெண் ஒருவர் இல்லாமல் செய்த சம்பவம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் நகேஷ். இவருடைய மனைவி மமதாவுக்கு 25 வயது ஆகிறது. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் இருந்தார்கள். இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுஜாதா (40) என்பவருடன் நகேசுக்கு நட்பும், பழக்கமும் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தெரியவந்ததால், நகேசுக்கும், மமதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சுஜாதாவுடனான தொடர்பை கைவிடுமாறு மமதா தனது கணவரை வலியுறுத்தி வந்துள்ளார். சுஜாதாவையும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் சுஜாதா கடும் ஆத்திரம் அடைந்தார். மமதா உயிரோடு இருக்கும் வரை கள்ளக்காதலனோடு உல்லாசம் அனுபவிக்க முடியாது என்று நினைத்த சுஜாதா, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த சுஜாதா, நகேஷ் இல்லாத நேரத்தில் மமதா வீட்டுக்கு சென்றார். அங்கு குழந்தைக்கு மமதா தாய்ப்பால் கொடுத்து கொண்டு இருந்தார். உடனே தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து மமதா மீதும், குழந்தை மீதும் கண் இமைக்கும் நேரத்தில் ஊற்றி தீ வைத்தார். இதில் அலறித்துடித்த தாயும், குழந்தையும் படுகாயம் அடைந்தனர். உடனே சுஜாதா ஓடி விட்டார்.
தீக்காயம் அடைந்த குழந்தையையும், தாயையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையுடன் தாய் எரித்துக்கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications