ஏய் ஏய் அக்கடச்சூடு.. போட்டோவுக்காக தூங்கி கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பிய நடிகர் பாலகிருஷ்ணா
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை ஓங்கி அடித்து எழுப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
என்டி ராமாராவின் மகன் பாலகிருஷ்ணா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். அவரின் நடன அசைவுகளை மீம் போட்டு பலர் கிண்டல் செய்வது வழக்கம்.
கோபத்தில் அவரது கைகளில் நரம்பு வித்தியாசமாக கிராப்பிக் செய்யப்படுவதையும் ரசிகர்கள் டிரோல் செய்யாமல் விடுவதில்லை. அந்த வகையில் நடிகர் பாலகிருஷ்ணா சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக கொண்டவர்.

படப்பிடிப்பின் போது
கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பின் போது தனது காலணியில் அவிழ்ந்து கிடந்த லேசை கட்டாமல் பேசிக் கொண்டிருந்ததாக தனது உதவியாளரை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அன்று முதல் அவர் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிட்டது. அவர் நடிகர், நடிகைகளை கிண்டல் செய்வது, அவமரியாதையாக நடந்து கொள்வது என பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

தெலுங்கு ஊடகம்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் ஏ.ஆர். ரஹ்மானை இழிவுப்படுத்தி பேசியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் குறித்த கேள்விக்கு விருதுகள் எப்போதும் என் கால் தூசிக்கு சமம். யாரோ ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் வாங்கியிருக்காராமே. அவர் யாரென்றே எனக்கு தெரியாது. பாரத ரத்னா போன்ற விருதுகள் என் தந்தை என்டிஆரில் சுண்டு விரலுக்கு சமம்.

ஆஸ்கர் விருது
அவர் ஒரு முறை ஆஸ்கர் விருதை வாங்கிவிட்டால் அது பெரிய விஷயமல்ல. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவரது பாடல் ஹிட்டாகிறது. எந்த ஒரு உயரிய விருதும் எனது குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைகளுக்கு ஈடாகாது. அதனால் எங்கள் குடும்பத்துக்கு முன் இந்த விருதுகள் தான் வெட்கப்பட வேண்டும் என அவர் கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கிரகபிரவேசம்
அத்துடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரான் ஆகியோரையும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் ரசிகர் ராமு என்பவரின் வீட்டு கிரகபிரவேசத்திற்கு பாலகிருஷ்ணா அழைக்கப்பட்டார். அந்த விழா முடிந்தவுடன் அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
|
தூங்கும் குழந்தையை அடித்து எழுப்பிய பாலகிருஷ்ணா
அப்போது ஒரு ரசிகர் தனது குழந்தையை தோளில் போட்ட படியே வந்து புகைப்படம் எடுக்க விரும்பினார். அப்போது குழந்தை தூங்கி கொண்டிருந்ததை கண்ட அவர், அந்த குழந்தையின் முதுகில் ஓங்கி அடித்து எழுப்பினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. மீண்டும் பாலகிருஷ்ணா விமர்சனத்துக்குள்ளாகப்பட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications