டெல்லிக்கு அவார்டு வாங்க போனப்ப.. கசப்பான அனுபவம்.. அவமானம்.. சிரஞ்சீவி வேதனை
ஹைதராபாத்: இந்தி சினிமாதான் இந்திய சினிமாவா என தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
விலை வாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு என எல்லாத்தையும் மக்கள் மறந்துவிட்டார்கள் போலவே தெரிகிறது அண்மைக்காலமாக நடக்கும் சம்பவங்களை பார்த்தால்!
விலை உயர்வை மறக்கடிப்பது போல் இந்தி பிரச்சினை தலைத்தூக்கியுள்ளது. அரசியல்வாதிகள் முதல் சினிமா நடிகர்கள் வரை இந்தி மொழி குறித்து பேசி வருகிறார்கள். இந்தி திணிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான்
அண்மையில் ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்தான் இணைப்பு மொழி என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பதில் கொடுப்பது போல் பேசியிருந்தார். இதையடுத்து நடிகர் யாஷ், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இந்தி மொழி குறித்து பேசியிருந்தனர். இவர்கள் பற்ற வைத்த நெருப்பு என்பதை போல் இன்று வரை ஒவ்வொருவராக கருத்து சொல்லி வருகிறார்கள்.

ஹைதராபாத்
அந்த வகையில் ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். ஆச்சார்யா என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசுகையில், கடந்த 1988 ஆம் ஆண்டு ருத்ரவீணா என்ற படத்தை தயாரித்தேன். இந்த படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.

டெல்லியில் நடந்த சம்பவம்
இதை பெற்றுக் கொள்ள டெல்லி சென்றோம். அப்போது விருது வழங்கும் விழாவுக்கு முன்னதாக தேனீர் விருந்தில் கலந்து கொண்டோம். அந்த விருந்து கூடத்தின் சுவரில் ராஜ் கபூர், திலிப் குமார், தேவ் ஆனந்த், அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆனால் தென் மாநிலங்கள் சார்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா, பிரேம் நசீர் ஆகியோரின் புரைப்படங்கள் மட்டுமே இருந்தன.

இந்தி தான் இந்திய சினிமாவா
நடிகர்கள் சிவாஜி கணேசன், ராஜ்குமார், என் டி ராமாராவ், விஷ்ணு வர்தன் ஆகியோரின் புகைப்படங்கள் எல்லாம் இடம்பெறவில்லை. இது என் மனதை பாதித்தது. இந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமா என்பதை போன்ற தோற்றத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள். இதனால் தென் மாநில சினிமாவை அவமானப்படுத்துவதாக உணர்ந்தேன் என சிரஞ்சீவ் தனது வேதனையை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications