21 ஆண்டுகளாக நுரையீரலில் "உட்கார்ந்திருந்த" பேனா மூடி.. ஆடிப்போன தெலுங்கானா! இப்ப என்னாச்சு தெரியுமா
ஹைதராபாத்: 21 ஆண்டுகளாக விடைதெரியாத கேள்விக்கு, தெலுங்கானா டாக்டர்கள் விடை தந்துள்ளதுடன், தீர்வையும் பெற்றுத்தந்துவிட்டார்கள்.. மிகப்பெரிய சாதனையாக இது பேசப்பட்டும் வருகிறது.. அப்படி என்னதான் நடந்தது தெலுங்கானாவில்?
தெலுங்கானா கரீம்நகரை சேர்ந்த அந்த நபருக்கு தற்போது 26 வயதாகிறது.. இவர் 5 வயது சிறுவனாக இருக்கும்போது, பேனா மூடியை விழுங்கிவிட்டாராம்.. பேனாவை வாயில் வைத்து விளையாடி கொண்டிருந்தபோது, தற்செயலாக அந்த பேனா மூடியை விழுங்கிவிட்டார். இதை உடனே தன்னுடைய பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதை அவர்கள் நம்பவில்லையாம்..

ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை
அவ்வளவு பெரிய பேனா மூடி எப்படி தொண்டைக்குள் இறங்கும்? சிறுவன் பொய் சொல்கிறான் என்று நினைத்து, அதை கண்டுக்காமல் விட்டுவிட்டார்களாம். அதுமட்டுமல்லாமல், சிறுவனுக்கும் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. ஒருகட்டத்தில் இந்த பேனா மூடி விவகாரத்தை சிறுவனும், பெற்றோரும் மறந்தேவிட்டனர்.
ஆனால், அந்த பேனா மூடி, தொண்டையில் இறங்கி அவரது நுரையீரலில் சிக்கி கொண்டுவிட்டது... அதற்கு பிறகு சிறுவன் வளர்ந்து இளைஞராகிவிட்டார்.. பிறகுதான் மெல்ல உடல் நலக்குறைவு ஏற்பட்டது... உடல் எடை குறைய துவங்கியது.. என்ன காரணம் என்று தெரியாமல், மெடிக்கல் செக்கப்களை எடுத்தார்.. அப்போதுதான் நுரையீரலில் பேனா மூடி சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக மாதப்பூரில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. இது தொடர்பான சிகிச்சையும் நடந்து முடிந்து, தற்போது நுரையீரலில் இருந்த பேனா மூடியை, டாக்டர்கள் வெற்றிக்கரமாக அகற்றி உள்ளனர்.
மூச்சுவிட முடியவில்லையாம்
இது குறித்து நுரையீரல் நிபுணர் டாக்டர் சுபகர் நாதெல்லா சொல்லும்போது, "கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் நோயாளியின் நிலை மோசமடைந்தது.. தூங்கும் போது மூச்சுவிட முடியவில்லை.. எனவே சி.டி., ஸ்கேன் எடுத்து பார்த்ததில், அவரது இடது கீழ் நுரையீரலில் தொற்று இருப்பது தெரியவந்தது.
ஆரம்பத்தில் நுரையீரலில் ஒரு அடைப்பு இருப்பதாக நாங்கள் சந்தேகித்தோம். ஆனால் உள்ளே ஒரு பேனா மூடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம். இப்படியே இன்னும் சில வருஷம் போயிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியை ஆபரேஷன் மூலம் அகற்ற வேண்டியிருக்கும்" என்றார்.
அங்கே எப்படி பேனா மூடி
பேனா மூடியை நுரையீரலில் பார்த்ததுமே அதிர்ந்துபோன டாக்டர்கள், பேனா மூடி எப்படி அங்கே போனது? என்று கேட்டிருக்கிறார்கள்.. பிறகுதான், 5 வயதில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளனர்.. இபபோதைக்கு பேனா மூடியால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பிற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துகொண்டிருக்கிறார்கள்.. நோயாளியும் முழுமையாக குணமடைந்துவிட்டாராம்.
21 ஆண்டுகளாக நுரையீரலில் பேனா மூடியுடன் வாழ்ந்த வந்த இளைஞர், தற்போது நலமுடன் இருப்பதாகவும், பூரண குணமடைந்துவிட்டதாகவும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications