விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. தரையிறங்கும்போது வெடித்து சிதறிய டயர்! பயணிகள் அலறல்
ஹைதராபாத்: ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது திடீரென விபத்தில் சிக்கியது. ஹைதராபாத்தில் இருந்து ஃபூகெட்டுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விமானம் தரையிறங்கும் போது முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாகவே மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறைகளில் ஒன்று விமான போக்குவரத்து. இருப்பினும், அதிலும் கூட சில பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படும். அதுபோல விமானங்களில் நடக்கும் விபத்துகள் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானத்தின் முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அது விபத்தில் சிக்கியுள்ளது.
ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 (VT-BWQ) விமானம், புக்கெட்டில் தரையிறங்கியபோது தான் இந்த சம்பவம் நடந்தது. இதன் காரணமாக விமானத்தின் முன்புற சக்கரம் கழன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
விமானம் ஓடுதளத்தில் சிக்கியதால், புக்கெட் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த விபத்தை பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இருப்பினும், இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications