2, 3 நாளா யாரும் சாகலை.. கையில் காசு இல்லை.. ஆக்ஸிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஒரு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் லைனை ஆப் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீஸார் லத்தியால் அடித்தனர்.
இரண்டு, மூன்று நாட்களாக யாரும் சாகாததால் காசு இல்லாமல் தவித்ததால் இப்படி செய்ததாக டிரைவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சரி செய்யும் பணிகளில் மாநிலங்கள் உள்ளன.

ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான உயிர்கள் இந்தியாவில் பறி போயுள்ளன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் திடீரென ஆக்ஸிஜன் பைப்லைனில் இருந்து ஆக்ஸிஜன் வராமல் நோயாளிகள் திணறினர்.

மருத்துவமனை
இதையடுத்து ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் இடத்திற்கு சென்று பார்த்தபோது மருத்துவமனைக்கு செல்லும் ஆக்ஸிஜன் பைப்லைன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அந்த மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் டிரைவர் இந்த மாபாதக காரியத்தை செய்தது தெரியவந்தது.

தவிப்பு
இதையடுத்து அவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் கூறிய பதிலை கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2, 3 நாட்களாக இந்த மருத்துவமனையில் யாரும் சாகவில்லை. இதனால் நான் காசு இல்லாமல் தவித்தேன். அதனால் அப்படி செய்தேன் என்றார். பின்னர் அவரை போலீஸார் லத்தியால் அடித்து உயிரின் மதிப்பை புரிய வைத்தனர்.

வத்தி
இதையடுத்து அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை பார்த்த நெட்டிசன்கள் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். தனது உயிரை துச்சமாக கருதி நோயாளியை குறித்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து அவர்களது உயிரை பிழைக்க வைக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications