ஆஹா.. அது என்ன தலைக்கு மேலே.. "பாகுபலி.." நெஞ்சை உருக்க வைத்த தெலுங்கானா வீடியோ
ஐதராபாத்: தெலுங்கானாவில் கனமழை பெய்து வரும் நிலையில் பாகுபலி பட ஸ்டைலில் கழுத்தளவு தண்ணீரில் ஒருவர் 3 மாத ஆண் குழந்தையை பாதுகாப்பாக மீட்டு சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
Recommended Video
தென்மேற்கு பருவழை தாமதமாக துவங்கி பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இதமான சூழல் நிலவுகிறது.
இதேபோல் அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் கனமழை பெய்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தெலுங்கானாவில் கனமழை
மேலும் கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தெலுங்கானாவில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணம் ஐ தரபாத் உள்பட பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நல்கொண்டா, பத்ராத்ரி கொதகுடம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்யும் மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் தெலங்கானாவின் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்பட்ட விடுமுறை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடம் செல்லும் பொதுமக்கள்
தெலங்கானா பெத்தப்பள்ளி மாவட்டம் மந்தானி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்வதால் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இன்னும் மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். பொதுமக்கள் மார்பளவு, கழுத்தளவு தண்ணீரில் நடந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

3 மாத குழந்தை மீட்பு
இந்நிலையில் தான் மந்தானி பகுதியில் 3 மாத ஆண் குழந்தை பாகுபலி பட ஸ்டைலில் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அதாவது வெள்ளத்தில் தவித்த குடும்பம் ஒன்று தங்களின் வீட்டை விட்டு வெளியேறுகிறது. கழுத்தளவு வெள்ளம் செல்வதால் 3 மாத ஆண் குழந்தையை பாதுகாக்க அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கூடை துணியை சுற்றி அதில் குழந்தையை படுக்க வைத்தனர். அதன்பிறகு அந்த கூடையை ஒருவர் தலையில் சுமந்து செல்கிறார்.

பாகுபலி படத்தில் காட்சி எப்படி?
இது பாகுபலி படத்தில் வரும் காட்சியை நினைவூட்டும் வகையில்ல உள்ளது. அதாவது ரம்யா கிருஷ்ணன், பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்தியராஜ் நடித்து வெளியான பாகுபலி படத்தில் வரும் ஒரு காட்சியில் ரம்யா கிருஷ்ணன் எதிரிகளிடம் இருந்து குழந்தையுடன் தப்பிக்க முயற்சி செய்வார். அப்போது அவர் கால்தவறி கீழே விழுந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கிவிடுவார். கழுத்தளவு தண்ணீர் செல்லும் நிலையில் ரம்யா கிருஷ்ணன் குழந்தையை தனது கையால் மேல்நோக்கி தூக்கிபிடித்து தனது உயிரை கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றுவார். தற்போதைய நிகழ்வும் பாகுபலி படபாணியில் இருப்பதாக கூறி அதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications