அமித்ஷா இந்த பக்கம்.. ஒவைசி அந்த பக்கம்! ஹைதராபாத்தில் விடுதலை நாள் VS தேசிய ஒருமைப்பாட்டு தினம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஒரு பக்கம் ஹைதராபாத் விடுதலை தினத்தை அமித்ஷா கொண்டாடி வரும் நிலையில், மறுபக்கம் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை கொண்டாடுகிறது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று மத்திய அரசு சார்பில் விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்ச்சர் அமித்ஷா ஹைதராபாத்துக்கு நேற்று சென்று இருக்கிறார். எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக நேற்று தெலுங்கானா மாநில பாஜக மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

Amit Shah celebrating Hyderabad Liberation Day and Owaisi celebrating National Unity Day

செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்று ஹைதராபாத் விடுதலை தினம் கொண்டாடப்படும் நிலையில், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் சார்பில் 2 வது ஆண்டாக இந்த நாளில் விடுதலை தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அணிவகுப்பு மைதானத்தில் இன்று காலை ஹைதராபாத் விடுதலை தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய துணை ராணுவப் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஹைதராபாத் விடுதலை தின வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். அதை தொடர்ந்து நம்பல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

ஹைதராபாத் விடுதலை நாள் குறித்து தெலுங்கானா பாஜக மாநில தலைவரும், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சருமான கிஷன் ரெட்டி தெரிவிக்கையில், "போலாராமில் உள்ள ராஷ்டிரபதி நிலையத்தில் நடைபெற இருக்கும் ஹைதராபாத் விடுதலை நாள் நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காணொலி காட்சி மூலமாக பங்கேற்க உள்ளார்.

ஹைதராபாத் விடுதலை நாளுக்கும் ராஷ்டிரபதி நிலையத்துக்கும் தொடர்பு இருக்கிறது. செப்டம்பர் 17 ஆம் தேதி ஹைதராபாத்துக்கு விடுதலை கிடைத்தவுடன் ராஷ்டிரபதி நிலையத்தில்தான் முதன்முதலில் தேசிய கொடி ஏற்றப்பட்டது." என தெரிவித்தார்.

மறுபக்கம் ஹைதராபாத் எம்பி அசதுத்தீன் ஒவைசி தலைமையிலான மஜ்லிஷ் கட்சி இந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடுகிறது. அதன் அடிப்படையில் இன்று பைக் பேரணி செல்ல அக்கட்சி திட்டமிட்டு இருக்கிறது. நம்பல்லி பகுதியில் உள்ள தர்கா யூசுப் அய்னில் இருந்து தொடங்கும் இந்த பைக் பேரணி, மசாப் டேங்க் ஹாக்கி மைதானம் அருகே நிறைவடைகிறது.

அங்கு பொதுக்கூட்டத்திற்கும் மஜ்லிஸ் கட்சி ஏற்பாடு செய்து உள்ளது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் அசதுத்தீன் ஒவைசி, தெலுங்கானா எம்.எல்.ஏ. அக்பருதீன் ஒவைசி, அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+